வீடு / சமையல் குறிப்பு / பெங்காலி மீன் கிரேவி

Photo of bengali fish curry by Mughal Kitchen at BetterButter
537
0
0.0(0)
0

பெங்காலி மீன் கிரேவி

Sep-08-2018
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பெங்காலி மீன் கிரேவி செய்முறை பற்றி

Bengali fish curry. Because of adding coconut milk the will be richer and tastier.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மேற்கு வங்காளம்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மீன் அரை கிலோ
  2. தேங்காய்ப் பால் ஒரு கப்
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
  4. சாம்பார் வெங்காயம் 15
  5. பூண்டு 15
  6. வெள்ளை மிளகு ஒன்றரை மேசைக்கரண்டி
  7. ஷஹிசிரா ஒரு டீஸ்பூன்
  8. சீரகம் ஒரு மேசைக்கரண்டி
  9. கசகசா ஒன்றரை மேசைக்கரண்டி
  10. துருவிய தேங்காய் 3 மேசைக்கரண்டி
  11. மல்லி செடி பச்சை மிளகாய் தேவைக்கு
  12. கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 100 கிராம்
  13. தக்காளி-3
  14. தாளிக்க பட்டை 1 கிராம்பு 2 ஏலக்காய் ஒன்று

வழிமுறைகள்

  1. மீனை கழுவி வைக்கவும்
  2. அரைக்க தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்
  3. அரைத்துக்கொள்ளவும் தேங்காய் சேர்த்து
  4. தேங்காய் பால் எடுத்து வைக்கவும்
  5. வெங்காயம் பூண்டை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.அதனுடன் தக்காளியையும் அரைக்கவும்
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  7. பின் அரைத்த வெங்காயம் தக்காளி பூண்டு சேர்க்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்த பின் இரண்டு நிமிடம் கழித்து அரைத்த மசாலா சேர்க்கவும்
  8. பின் தேங்காய் பால் சேர்த்து கால் மணி நேரம் குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும்
  9. பின் உப்பு சேர்த்து மீனை சேர்க்கவும்
  10. 10 நிமிடங்கள் மீன் வெந்த பின் அடுப்பை அணைத்து மல்லித்தழை தூவவும்
  11. பெங்காலி கோகனட் ஃபிஷ் கறி ரெடி
  12. சாதம் புலாவ் சப்பாத்தி நான் அனைத்திற்கும் ஏற்ற சைட் டிஷ் ஆக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்