வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Vaazhaipoo Vadai by Divya  at BetterButter
1708
22
4.0(0)
0

வாழைப்பூ வடை

Jun-21-2016
Divya
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ - 1 கப் நறுக்கப்பட்டது.
  2. கடலை பருப்பு - 1 கப்
  3. வெங்காயம் - 2 எண்ணிக்கை பொடியாக நறுக்கப்பட்டது
  4. பச்சைமிளகாய் - 4 எண்ணிக்கை பொடியாக நறுக்கப்பட்டது
  5. இஞ்சி - 1 இன்ச் பொடியாக நறுக்கப்பட்டது
  6. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  7. இலவங்கப்பட்டை, கிராம்பு கொஞ்சம்
  8. பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
  9. மோர் - 1/2 கப்
  10. கறிவேப்பிலை, கொத்துமல்லி கொஞ்சம் - பொடியாக நறுக்கப்பட்டது
  11. சுவைக்கேற்ற உப்பு
  12. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாழைப்பூவைச் சுத்தப்படுத்த - முதலில் கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டபின் வாழைப்பூவை ஒவ்வொரு அடுக்காகத் திறந்து அவற்றில் உள்ள வெள்ளைப்பூவை சேகரிக்கவும்.
  2. சிறிய வெள்ளை நிற கண்ணாடி போன்ற தோலையும் சிறிய மொஒட்டோடு அடுத்துள்ள காயையும் நீக்கவும். மீதமுள்ள பூவைப் பயன்படுத்தவும். என்சைம் பழுப்பாகாமல் இருக்க மோரில் ஊறவைக்கவும்.
  3. போரில் இருந்து பூக்களை எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  4. கடலைப் பருப்பை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  5. கொஞ்சமாகத் தண்ணீர் கலந்து கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பு, நறுக்கப்பட்ட வாழைப்பூ, பச.சை மிளகாய், இலவங்கப்பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
  7. அதைக்கொண்டு சிறு சிறு உருண்டைகள் உருட்டி சற்றே அழுத்தி சிறுசிறு வடைகளை செய்துகொள்ளவும்.
  8. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி வாழைப்பூ வணையைப் பொன்னிறமாக பொரித்துக்கொள்ளவும்.
  9. தேங்காய் சட்னி அல்லது சாசுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்