வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பருப்பு உசிலி

Photo of Vazhaipoo Paruppu Usili by Jayasakthi Ekambaram at BetterButter
566
0
0.0(0)
0

வாழைப்பூ பருப்பு உசிலி

Sep-09-2018
Jayasakthi Ekambaram
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பருப்பு உசிலி செய்முறை பற்றி

துவரம்பருப்பு கடலைப்பருப்பை ஊற வைத்து அரைத்து ரோஸ்ட் செய்து வேகவைத்த வாழைப்பூ உடன் சேர்த்து செய்யும் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வாழைப்பூ1
  2. வெங்காயம் ஒன்று
  3. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  4. துவரம்பருப்பு இரண்டு டீஸ்பூன்
  5. கடுகு அரை டீஸ்பூன்
  6. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் இரண்டு
  8. கருவேப்பிலை ஒரு கொத்து
  9. உப்பு தேவையான அளவு
  10. எணணைய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை சுத்தம் செய்து உப்பு கலந்த தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. வாழைப்பூவை நன்றாக அலசி தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்
  4. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து அதில் வாழைப்பூவைப் போட்டு நன்கு வேக வைக்கவும்
  5. அரைத்தெடுத்த பருப்பை வாணலியில் எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து விட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்
  7. எண்ணை காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  8. வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  9. வேக வைத்த வாழைப்பூவை சேர்க்கவும்
  10. தண்ணீர் நன்றாக வற்றியதும் வறுத்த பருப்பு தூள் போட்டு நன்றாக கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்