வீடு / சமையல் குறிப்பு / காராமணி நேந்திரங்காய் தோல் தோரன்

Photo of Cowpeas&Plaintain peel Thoran by Menaga Sathia at BetterButter
303
1
0.0(0)
0

காராமணி நேந்திரங்காய் தோல் தோரன்

Sep-09-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காராமணி நேந்திரங்காய் தோல் தோரன் செய்முறை பற்றி

நேந்திரங்காய் தோலில் தோரன் மிக சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நேந்திரங்காய் தோல் -2 காயிலிருந்து எடுத்து பொடியாக நறுக்கியது
  2. சாம்பார்பொடி -1 டீஸ்பூன்
  3. மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்
  4. வேகவைத்த காராமணி -1/3 கப்
  5. உப்பு -தேவைக்கு
  6. நசுக்கி கொள்ள:
  7. வெங்காயம் -1 சிறியது
  8. பூண்டுப்பல்-3
  9. இஞ்சி-1/2 டீஸ்பூன்
  10. அரைக்க:
  11. தேங்காய்துறுவல்-1/2 கப்
  12. சீரகம் -3/4 டீஸ்பூன்
  13. சின்ன வெங்காயம்-2
  14. தாளிக்க:
  15. தேங்காய் எண்ணெய்-2 டீஸ்பூன்
  16. கடுகு-1/2 டீஸ்பூன்
  17. கறிவேப்பிலை-1 ஈர்க்கு
  18. காய்ந்தமிளகாய்-2

வழிமுறைகள்

  1. நேந்திரங்காய் தோலினை பொடியாக நறுக்கி மஞ்சள்தூள், சிறிது தயிர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
  2. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து நசுக்கிய பொருட்களை சேர்த்து வதக்கவும்.
  4. பச்சை வாசனை அடங்கியதும் தோலினை சேர்க்கவும்.
  5. பின் மஞ்சள்தூள், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேகவைக்கவும்.
  6. வெந்ததும் காராமணி, அரைத்த தேங்காய் சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்