வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் அரைத்த புளிக்குழம்பு

Photo of Coconut mix pulli kulambu by hajirasheed haroon at BetterButter
179
1
0.0(0)
0

தேங்காய் அரைத்த புளிக்குழம்பு

Sep-10-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் அரைத்த புளிக்குழம்பு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருப்பு சுண்டல் ஒரு கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி-2
  4. கத்திரிக்காய் 6
  5. தாளிப்பதற்கு கடுகு வெந்தயம்
  6. உப்பு தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  8. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  9. தனியாத்தூள் மூன்று ஸ்பூன்
  10. பூண்டு 10 பல்
  11. கருவேப்பிலை சிறிதளவு
  12. பச்சை மிளகாய் ஒன்று
  13. புளிக்கரைசல் ஒரு
  14. தேங்காய் விழுது அரைப்பதற்கு
  15. தேங்காய் ஒரு மூடி
  16. சீரகம் ஒரு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன்
  17. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கருப்பு சுண்டலை முதல் நாள் இரவே ஊற வைக்கவும் கருப்பு சுண்டலில் தண்ணீர் உப்பு சிறிது சேர்த்து குக்கரில் மூன்று விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. தேங்காயை துருவி கொள்ளவும் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்து கொள்ளவும் வறுத்த வெந்தயம் சீரகத்தை மிக்ஸியில் தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பிறகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும் கலவை நன்கு வதங்கியவுடன் தக்காளி உப்பு கத்தரிக்காய் சேர்த்து எண்ணெயில் வதக்கவும் பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு தண்ணீர் ஊற்றி கத்தரிக்காயை வேக விடவும் பிறகு புளிக்கரைசல் வேக வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  4. கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறலாம் சுவையான தேங்காய் அரைத்த புளிக்குழம்பு தயார்
  5. இது சுண்டல் ஊறவைத்த நேரத்தை நான் சேர்க்கவில்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்