வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கோலா உருண்டை குழம்பு

Photo of Mutton kola urundai kulambu by Swarna Vijayakumaar at BetterButter
0
0
0(0)
0

மட்டன் கோலா உருண்டை குழம்பு

Sep-10-2018
Swarna Vijayakumaar
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குழம்பு செய்ய
  2. எலும்பு கறி - 1/4 கிலோ
  3. தேங்காய் - 1 மூடி
  4. சோம்பு - 1ஸ்பூன்
  5. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  6. மல்லித்தூள் - 3 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - சிறிதளவு
  8. சின்ன வெங்காயம் - 10
  9. இஞ்சி 1 துண்டு
  10. வெங்காயம் - 1
  11. பூண்டு - 6 பல்
  12. தக்காளி - 1
  13. கறிவேப்பிலை - 1 கொத்து
  14. பட்டை கிராம்பு தலா - 3
  15. எண்ணெய்
  16. கோலா உருண்டை செய்ய
  17. கறி கொத்தியது - 1/4 கிலோ
  18. தேங்காய் - 1
  19. சோம்பு - 1ஸ்பூன்
  20. மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
  21. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  22. சின்ன வெங்காயம் - 10
  23. பூண்டு - 10 பல்
  24. இஞ்சி - சிறு துண்டு
  25. கறிவேப்பிலை - 1 கொத்து
  26. உப்பு 1/4 ஸ்பூன்
  27. மஞ்சள் தூள் - சிறிதளவு

வழிமுறைகள்

  1. எலும்பு கறியை சுத்தம் செய்து 3 தம்ளர் தண்ணீர் விட்டு சின்ன வெங்காயம், இஞ்சி,மஞ்சள் தூள்,சிறிது உப்பு,சிறிது மிளகாய் தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  2. கொத்திய கறியை நன்றாக அலசி விட்டு தண்ணீரை பிழிந்து வைக்கவும்.
  3. கொத்திய கறியில் பூண்டு,சி,வெங்காயம், இஞ்சி,கறிவேப்பிலை, சோம்பு,தேங்காய், உப்பு,ம.தூள், மி,தூள்,மல்லித்தூள், பொட்டு கடலை சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  4. அரைத்த கலவையை உருட்டி வைக்கவும்.
  5. வேக வைத்த கறியில் தேங்காய், சோம்பு,மிளகாய் தூள்,மல்லிதூள் அரைத்து, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  6. நன்கு கொதிக்கும் பொழுது உருட்டிய உருண்டைகளை போடவும். (தானாக வெந்து மேல உருண்டு வரும் குக்கரை சுத்தி விடவும் கரண்டி போடாமல்.)
  7. வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு தாளித்து வெங்காயம்,பூண்டு, தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  8. தாளித்தவற்றை கொதிக்கும் குழம்பில் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்