வீடு / சமையல் குறிப்பு / மலேசிய நாசி லெமாக் மற்றும் சிக்கன் ரென்டேங்

Photo of Malaysian Nasi Lemak with Chicken Rendang by Hameed Nooh at BetterButter
1030
3
0.0(0)
0

மலேசிய நாசி லெமாக் மற்றும் சிக்கன் ரென்டேங்

Sep-10-2018
Hameed Nooh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மலேசிய நாசி லெமாக் மற்றும் சிக்கன் ரென்டேங் செய்முறை பற்றி

மலேசிய நாட்டு பாரம்பரியமான சுவை உடைய தேங்காய் பாலில் செய்யப்படும் தேங்காய் சோறு மற்றும் சிக்கன் ரென்டாங்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தாய்
  • சிம்மெரிங்
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நாசி லெமாக் செய்வதற்கு
  2. தேங்காய் பால் 2 கப்
  3. ரம்பை இலை இரண்டு
  4. பாஸ்மதி அரிசி 2 கப்
  5. நறுக்கிய இஞ்சி கால் தேக்கரண்டி
  6. சிறிய வெங்காயம் 4
  7. உப்பு சுவைக்கேற்ப
  8. சிக்கன் ரென்டேங் செய்வதற்கு
  9. சிக்கன் அரை கிலோ
  10. பட்டை ஒன்று
  11. கிராம்பு-3
  12. ஏலக்காய்-3
  13. அன்னாசிப்பூ 3
  14. தேங்காய்ப் பால் ஒரு கப்
  15. வறுத்த தேங்காய் துருவல் 4 மேஜைக்கரண்டி
  16. சர்க்கரை 2 தேக்கரண்டி
  17. தண்ணீர் ஒரு கப்
  18. எண்ணெய் - கால் கப்
  19. கொழுமிச்சை (நார்த்தை) இலை 5
  20. உப்பு சுவைக்கேற்ப
  21. மசாலா பேஸ்ட் செய்வதற்கு
  22. சிறிய வெங்காயம் 6
  23. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  24. பூண்டு 4
  25. காய்ந்த மிளகாய் 10

வழிமுறைகள்

  1. நாசி லெமாக் தேங்காய் சோறு செய்வதற்கு முதலில் அரிசியை நன்றாக தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.
  2. பிறகு அதனை 20 நிமிடங்கள் 2 கப் தண்ணீரில் ஊர வைக்கவும்.
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் நறுக்கிய இஞ்சி உப்பு ரம்பை இலை மற்றும் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
  4. இப்போது சுவையான நாசி லெமாக் தயார்
  5. சிக்கன் ரென்டேங் செய்வதற்கு மசாலா பேஸ்ட் செய்ய தேவையான பொருட்கள் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதோடு பட்டை அன்னாசிப்பூ கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
  7. பிறகு அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறவும்.
  8. பிறகு சுத்தப்படுத்திய சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
  9. இனி தேங்காய் பால் தண்ணீர் ஊற்றி குறைந்த தணலில் வைத்து சிக்கனை வேக விடவும்
  10. வறுத்த தேங்காய் துருவல் மற்றும் கொழுமிச்சை இலை சேர்த்து அரை மணிநேரம் வரை குறைந்த தணலில் வேக வைக்கவும்
  11. இறுதியாக சிறிது சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்
  12. வறுத்த வேர்க்கடலை மற்றும் பொரித்த நெத்திலி கருவாடு நறுக்கிய வெள்ளரிக்காய் அவித்த அல்லது பொரித்த முட்டை ஆகியவற்றோடு தேங்காய் சோறு மற்றும் சிக்கன் ரென்டேங் ஆகியவற்றை வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்