வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Banana flower vadai by Krishnasamy Vidya Valli at BetterButter
651
1
0.0(0)
0

வாழைப்பூ வடை

Sep-10-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

வாழைப்பூ உடலுக்கு மிகவும் நல்லது அதைவைத்து செய்யும் எளிமையான ஸ்நாக்ஸ் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ 1/4 கப்
  2. கடலைப்பருப்பு 1/8 கப்
  3. துவரம் பருப்பு 1/8 கப்
  4. பச்ச மிளகாய் 1
  5. மிளகாய் வத்தல் 1
  6. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  7. சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது 6 முதல் 8
  8. உப்பு 1/2 தேக்கரண்டி
  9. கருவேப்பிலை மல்லி சிறிது
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பருப்புகளை அரைமணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்துக்கொள்ளவும்
  2. அதோடு பச்ச மிளகாய் உப்பு பெருங்காயம் மிளகாய் வத்தல் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று அரைக்கவும்
  3. பின் வாழைப்பூ சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை மல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்