வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Banana flower fritters by Madhumita Sathishkumar at BetterButter
422
0
0.0(0)
0

வாழைப்பூ வடை

Sep-10-2018
Madhumita Sathishkumar
195 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

மொறுமொறுப்பான இந்த வடையை வாழைப்பூ, பருப்பு மற்றும் மணமிக்க மசாலா பொருட்களைக் கொண்டு செய்யப் பட்டுள்ளது. இந்த வாழைப்பூ வடையை சட்னியுடன் அல்லது டீ/காபி யுடன் ருசிக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுத்தம் செய்த வாழைப்பூ - 1 1/2 கப் (நறுக்கியது)
  2. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  3. வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
  4. கருவேப்பிலை & மல்லி தழை - கையளவு
  5. உப்பு - 2 டீஸ்பூன்
  6. எண்ணெய் - பொரிப்பதற்கு
  7. அரைக்க:
  8. கடலை பருப்பு - 3/4 கப்
  9. உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன்
  10. அரிசி - 2 டீஸ்பூன்
  11. வர மிளகாய் - 5
  12. சோம்பு - 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி, அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களுடன் சேர்த்து 3 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
  2. வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து, கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. மூன்று மணி நேரம் கழித்து ஊற வாய்த்த நீரை வடி கட்டி, மீதம் உள்ள பொருட்களை மிக்ஸியில் இட்டு கொரகொரப்பாக நீர் சேர்க்காமல் அரைக்கவும். மிகவும் கடினமாக இருந்தால் 1 டீஸ்பூன் நீர் விட்டு அரைத்து கொள்ளலாம்.
  4. அரைத்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி, மீதம் கொடுக்கப் பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும். உப்பு சரி பார்க்கவும்.
  5. பொரிப்பதற்கு ஏற்றவாறு அடி கனமான பாத்திரத்தில் என்னை ஊற்றி சூடு செய்யவும்.
  6. தயார் செய்து வைத்துள்ள கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் என்னை தடவி, உருண்டையை வடை போன்று தட்டி, சூடான எண்ணையில் பொன்னிறமாகும்வரை நன்கு பொரித்தெடுக்கவும்.
  7. பொரித்து எடுத்த வடையை பேப்பர் டவெலில் எண்ணையை வடிக்கவும். பின் சூடாக பரிமாறவும்.
  8. இந்த வடையை, சட்னியுடன் அல்லது காபி/டீ யுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்