வீடு / சமையல் குறிப்பு / பொறி குழம்பு

Photo of Pori Kuzhambhu by Vaishnavi Prakash at BetterButter
942
1
0.0(0)
0

பொறி குழம்பு

Sep-11-2018
Vaishnavi Prakash
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பொறி குழம்பு செய்முறை பற்றி

காய்கறிகளுடன் தேங்காயை அரைத்து செய்யும் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பெரிய வெங்காயம் 4
  2. தக்காளி நான்கு
  3. பச்சை மிளகாய் ஐந்து
  4. பூண்டு உரித்தது 10 பற்கள்
  5. வெண்டைக்காய் அல்லது முள்ளங்கி அல்லது கத்தரிக்காய் & முருங்கைக்காய் 1/4 கிலோ
  6. தேங்காய் துருவியது 2 கப்
  7. சோம்பு அரை மேசைக்கரண்டி
  8. புளி இரண்டு எலுமிச்சை பழ அளவு
  9. மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
  10. தனியா தூள் ஒரு மேசைக்கரண்டி
  11. கரம் மசாலா அரை மேசைக்கரண்டி
  12. மஞ்சள் அரை தேக்கரண்டி
  13. கடுகு வெந்தயம் சீரகம் கருவேப்பிலை தாளிக்க
  14. என்னை 50ml
  15. முழு முந்திரி 4
  16. உப்பு தேவையான அளவு
  17. கொத்தமல்லி பொடியாக நறுக்கியது சிறிதளவு

வழிமுறைகள்

  1. தேங்காய் சோம்பு முந்திரி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  3. வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. இப்பொழுது எடுத்து நறுக்கி வைத்துள்ள காயை சேர்த்து வதக்கவும்
  6. காய் வதங்கியவுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்
  7. மசாலா ஒன்றாக சேர்ந்தவுடன் புளிக்கரைசலை ஊற்றி காய் வேகும் வரை கொதிக்க விடவும்
  8. நன்கு கொதித்தவுடன் உப்பு சேர்க்கவும்
  9. நன்கு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி விடவும்
  10. இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்