வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்பால் அச்சு முறுக்கு

Photo of coconut milk achhu muruku by Vani Harvish at BetterButter
488
0
0.0(0)
0

தேங்காய்பால் அச்சு முறுக்கு

Sep-11-2018
Vani Harvish
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்பால் அச்சு முறுக்கு செய்முறை பற்றி

தேங்காய்பால் சேர்த்து செய்வதால் சுவை நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு - 1கப்
  2. மைதா மாவு - 1/4 கப்
  3. முட்டை - 1 (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  4. தேங்காய் பால் - 1கப்
  5. சர்க்கரை -1/4 கப்
  6. உப்பு - 1பின்ச்
  7. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு சேர்த்து கிளறவும்
  2. பிறகு அதனுடன் தேங்காய் பால், சர்க்கரை, முட்டை, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. (தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்)
  4. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும்
  5. அச்சு முறுக்கு கம்பியை எண்ணெய்யில் 1/2 நிமிடம் வைத்து
  6. பிறகு அதை எடுத்து மாவில் முக்கி பிறகு அதை எண்ணெய்யில் வைக்கவும்
  7. மாவு கம்பியை விட்டு பிரிந்து செல்லும் வரை கம்பியை எடுக்க வேண்டாம்
  8. பிறகு மாவு தணியாக பிரிந்ததும் கம்பியை எடுத்து விட்டு
  9. அதை மாற்றி போட்டு இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்