வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் கேரட் கொழுக்கட்டை

Photo of Coconut milk carrot balls by Renuka Devi at BetterButter
267
0
0.0(0)
0

தேங்காய் பால் கேரட் கொழுக்கட்டை

Sep-11-2018
Renuka Devi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் கேரட் கொழுக்கட்டை செய்முறை பற்றி

கலர்ஃபுல்லா இருக்கும் பார்க்க .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இடியாப்ப மாவு ஒரு கப்
  2. சர்க்கரை ஒரு கப் + நாலு ஸ்பூன்
  3. கேரட் சாறு அரை கப்
  4. அல்லது கலர் பொடி சிறிதளவு
  5. தேங்காய்ப் பால் நான்கு கப்
  6. ஏலக்காய்த் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கப் சுடு தண்ணீரில் நான்கு ஸ்பூன் சர்க்கரையை கரைக்கவும்
  2. மாவில் கேரட் சாறை கலந்து கொள்ளவும்
  3. சர்க்கரை கலந்த வெந்நீரை மாவில் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  4. பிசைந்த மாவில் ஒரு எலுமிச்சை அளவு மாவை தனியாக எடுத்து வைக்கவும்
  5. மீதி இருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  6. ஒரு கப் தண்ணீர் ஒரு கப் தேங்காய்ப்பால் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்
  7. தண்ணீர் கொதித்ததும் சிறு உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வேக விடவும்
  8. கொழுக்கட்டைகள் வெந்ததும் சர்க்கரையை போட்டு கொதிக்க விடவும்
  9. சர்க்கரை கரைந்ததும் மீதி இருக்கும் தேங்காய் பால் ஏலக்காய் தூள் போடவும்
  10. ஒரு கொதி வந்ததும் எலுமிச்சையளவு இருக்கும் மாவை எடுத்து இடியாப்பம் போல் அதில் பிழிந்து விடவும்
  11. ரெண்டு நிமிடத்தில் இறக்கி விடவும்
  12. கலர்ஃபுல்லான இடியாப்ப தேங்காய் பால் கொழுக்கட்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்