வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சப்பாத்தி

Photo of Coconut chapathi by Rachell Revathi Samuel at BetterButter
193
1
0.0(0)
0

தேங்காய் சப்பாத்தி

Sep-11-2018
Rachell Revathi Samuel
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சப்பாத்தி செய்முறை பற்றி

தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் உள்ளே வைத்து தேய்த்து செய்யப்படும் சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு 1/2 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. தேங்காய் 1/2 கப்
  4. வெல்லம் 1/4 கப்
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் உப்பு மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
  2. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வெல்லம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. வெல்லம் உருக ஆரம்பித்ததும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கவும்
  6. சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து குழி போன்று செய்து கொள்ளவும்.
  7. அதன் உள்ளே தேங்காய் மற்றும் வெல்லக் கலவையை வைத்து மூடவும்.
  8. சப்பாத்தி கட்டையில் தேய்த்து கொள்ளவும்.
  9. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தேய்த்த சப்பாத்தியை போட்டு வேகவிடவும்.2 புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  10. சுவையான தேங்காய் சப்பாத்தி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்