வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ தோசை தேங்காய் சட்னி

Photo of Banana flower dosa with coconut chutney by Rachell Revathi Samuel at BetterButter
896
1
0.0(0)
0

வாழைப்பூ தோசை தேங்காய் சட்னி

Sep-11-2018
Rachell Revathi Samuel
150 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ தோசை தேங்காய் சட்னி செய்முறை பற்றி

வாழைப்பூ கொண்டு செய்யப்படும் தோச

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை: வாழைப்பூவின் சிறிய பூக்கள் 2 அடுக்கு
  2. அரிசி 3/4 கப்
  3. துவரம் பருப்பு 1/4 கப்
  4. மிளகாய் வற்றல் 4
  5. கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
  6. எண்ணெய் 1 ஸ்பூன்
  7. கடுகு 1/2 ஸ்பூன்
  8. வெங்காயம் 1
  9. சட்னி: தேங்காய் துண்டுகள் 1/4 கப்
  10. பொரிகடலை 3 ஸ்பூன்
  11. பச்சை மிளகாய் 1
  12. வெள்ளை பூண்டு 1
  13. எண்ணெய் 1 ஸ்பூன்
  14. கடுகு 1/2 ஸ்பூன்
  15. கருவேப்பிலை சிறிது
  16. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
  2. தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.அதனுடன் மிளகாய் வற்றல் மற்றும் கொத்தமல்லி விதையையும் ஊற வைக்கவும்.
  3. வாழைப்பூவில் இந்த 2 துண்டுகளையும் நீக்கி கொள்ளவும்.
  4. 2மணி நேரம் ஊறிய பின் மிக்ஸியில் அரிசி பருப்புடன் நறுக்கிய வாழைப்பூ துண்டுகளையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  5. அரைத்த மாவு.
  6. அரைத்த மாவை பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும்.
  8. கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் வதங்கியதும் அடுப்பை அணைத்து மாவில் போடவும்.
  10. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  11. தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும். எண்ணெய் ஊற்றவும்.
  12. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.சுவையான வாழைப்பூ தோசை தயார்.
  13. சட்னி: மிக்ஸியில் தேங்காய் பொரிகடலை பச்சை மிளகாய் பூண்டு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  14. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும்.
  15. சுவையான ஆரோக்கியமான வாழைப்பூ தோசை தேங்காய் சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்