வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் சாதம்

Photo of Coconut milk rice by Rachell Revathi Samuel at BetterButter
221
1
0.0(0)
0

தேங்காய் பால் சாதம்

Sep-11-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் சாதம் செய்முறை பற்றி

தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் சாதம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. நெய் 3 ஸ்பூன்
  2. பிரியாணி இலை 1
  3. பட்டை 1
  4. கிராம்பு 1
  5. ஏலக்காய் 1
  6. மிளகு 1/2 ஸ்பூன்
  7. சீரகம் 1/2 ஸ்பூன்
  8. இஞ்சி சிறிய துண்டு 1
  9. பாதாம் 10
  10. பச்சை மிளகாய் 1
  11. கருவேப்பிலை சிறிது
  12. வெங்காயம் 1
  13. கேரட் 1
  14. பட்டாணி 3 ஸ்பூன்
  15. அரிசி 1/2 கப்
  16. தேங்காய் பால் 1 கப்
  17. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும்.
  2. நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும் . நறுக்கிய பாதாம் சேர்த்து வதக்கவும்.
  3. பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து வதக்கவும்.
  6. ஒரு சில நிமிடங்கள் வதக்கவும்.
  7. காய்கறி வதங்கியதும் அரிசி சேர்த்து வதக்கவும்.
  8. ஒரு நிமிடம் அரிசி வதக்கவும்.
  9. தேங்காய் பால் 1 கப் சேர்க்கவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
  10. சுவையான தேங்காய் பால் சாதம் தயார் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்