வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Banana flower vada by Rachell Revathi Samuel at BetterButter
269
1
0.0(0)
0

வாழைப்பூ வடை

Sep-11-2018
Rachell Revathi Samuel
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

வாழைப்பூ கொண்டு செய்யப்படும் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பூ இதழ்கள் 1/2 கப்
  2. கடலை பருப்பு 1/2 கப்
  3. பச்சை மிளகாய் 1
  4. பட்டை 1
  5. சோம்பு 1/2 ஸ்பூன்
  6. வெங்காயம் 1
  7. கருவேப்பிலை சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் ஊற வைத்த கடலை பருப்பு பச்சை மிளகாய் பட்டை சோம்பு சேர்த்து அரைக்கவும்.
  2. வாழைப்பூவில் உள்ள இந்த பகுதிகளை நீக்கி கொள்ளவும்.
  3. சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூவை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  4. தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து கொள்ளவும்.
  5. அரைத்த விழுதை பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
  6. நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  7. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை தட்டி வடையாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  9. ஆரோக்கியமான வாழைப்பூ வடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்