வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பூரி

Photo of Coconut poori by Rachell Revathi Samuel at BetterButter
497
1
0.0(0)
0

தேங்காய் பூரி

Sep-11-2018
Rachell Revathi Samuel
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பூரி செய்முறை பற்றி

தேங்காயை உள்ளே வைத்து செய்யப்படும் இனிப்பு பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு 1/2 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. தேங்காய் 1/2 கப்
  4. வெல்லம் 1/4கப்
  5. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் உப்பு மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  2. எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து வெல்லம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. வெல்லம் உருக ஆரம்பித்ததும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. சில நிமிடங்கள் வதக்கி இறக்கவும்
  6. பிசைந்த பூரி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொரு உருண்டையிலும் தேங்காய் வெல்லக் கலவையை வைத்து மூடவும்
  7. பூரி கட்டையில் மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும்.
  8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரியை பொரித்து எடுக்கவும்.
  9. இரு புறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  10. சுவையான தேங்காய் பூரி தயார்.
  11. குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்பு பூரி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்