வீடு / சமையல் குறிப்பு / திறந்த உருளைக்கிழங்கு சாண்ட்விச்

Photo of Potato Open Sandwiches by Gouthami Yuvarajan at BetterButter
982
70
5.0(0)
0

திறந்த உருளைக்கிழங்கு சாண்ட்விச்

Jun-22-2016
Gouthami Yuvarajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 1 பெரியது
  2. முட்டை 3
  3. வெங்காயம் 1 நடுத்தர அளவு பொடியாக நறுக்கப்பட்டது
  4. பச்சை மிளகாய் 2
  5. புதிய கிரீம் 2 தேக்கரண்டி அல்லது கூடுதலாக
  6. சீரகம் 1 தேக்கரண்டி
  7. எண்ணெய் 2 தேக்கரண்டி + பொரிப்பதற்காக
  8. மேரினேட் செய்வதற்கு:
  9. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  10. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  11. சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
  12. மிளகாய்த்தூள் 3/4 தேக்கரண்டி
  13. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  14. எண்ணெய் 1 தேக்கரண்டி
  15. உப்பு சுவைக்கேற்ற அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு துண்டுகள்: உருளைக்கிழங்கைத் துண்டுபோட்டு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மேரினேட் செய்யவும். மேரினேட் செய்த துண்டுகளை பிட்ஜில்கூட வைக்கலாம்.
  2. இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை மேரினேட் செய்த துண்டுகளை பொரித்தெடுக்கவும்.
  3. பிசைந்த முட்டைகள்: முட்டைகளை கிரீமோடு அடித்துக்கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி சீரகத்தையும் சேர்க்கவும்.
  5. சீரகம் வெடித்ததும் பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
  6. இறுதியாக முட்டைக் கலவையைச் சேர்த்து முட்டை கலக்கும்வரை கலக்கவும்.
  7. தேவையான உப்பைச் சேர்க்கவும்.
  8. பிசைந்த முட்டைக் கலவையை உருளைக் கிழங்கின் மீது வைத்து தக்காளி கெச்சப் மற்றும் கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.
  9. மேலே இன்னொரு உருளைக்கிழங்கு துண்டை வைக்கலாம். அது உருளைக்கிழங்கு முட்டை சண்ட்விச் ஆகிவிடும் (பிரட் இல்லாமல்).

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்