வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பருப்பு உருண்டை குழம்பு, வாழைப்பூ வடை, வாழைத்தண்டு பொரியல்

Photo of Vazhaipoo Urundai Kuzhambu, Vazhaipoo Vadai and Vazhaithandu Poriyal by Jayasakthi Ekambaram at BetterButter
598
0
0.0(0)
0

வாழைப்பூ பருப்பு உருண்டை குழம்பு, வாழைப்பூ வடை, வாழைத்தண்டு பொரியல்

Sep-11-2018
Jayasakthi Ekambaram
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பருப்பு உருண்டை குழம்பு, வாழைப்பூ வடை, வாழைத்தண்டு பொரியல் செய்முறை பற்றி

வாழைப்பூவை வைத்து செய்யும் குழம்பு, வடை & வாழைத்தண்டை வைத்து செய்யும் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ1
  2. கடலைப் பருப்பு 150 கிராம்
  3. வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய் 2
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  6. கறிவேப்பிலை ஒரு கொத்து
  7. கொத்தமல்லி அரை கைப்பிடி அளவு
  8. தூள் உப்பு 2ஸ்பூன்
  9. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  10. வாழைத்தண்டு ஒரு துண்டு
  11. பயத்தம் பருப்பு 2 டீஸ்பூன்
  12. கடுகு 2டீஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  14. காய்ந்த மிளகாய் இரண்டு
  15. கறிவேப்பிலை 2 கொத்து
  16. சீரகம் ஒரு ஸ்பூன்
  17. வெந்தயம் அரை ஸ்பூன்
  18. தக்காளி-2
  19. புளி எலுமிச்சம்பழம் அளவு
  20. குழம்பு மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
  21. எண்ணெய் அரை லிட்டர்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும்
  2. அதனுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும்
  3. அரைத்த கடலைப்பருப்புடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் சோம்பு தூள் சேர்க்கவும்
  4. இதை இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளவும்
  5. ஒரு பாதி மாவை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு லேசாக பொரித்து எடுக்கவும்.
  6. மறுபாதி மாவை வடைகளாகத் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. உருண்டை குழம்பு செய்வதற்கு அடுப்பில் வாணலியை வைக்கவும்
  8. 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும்
  9. கடுகு பொரிந்ததும் சீரகம் வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை போடவும்
  10. பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  11. பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்
  12. தக்காளி கூழாக வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றவும்
  13. குழம்பு மிளகாய் தூள் சேர்க்கவும்
  14. அதை சிறிது நேரம் வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும்
  15. உப்பு போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்
  16. குழம்பு தேவையான பதம் வரும்போது லேசாக வறுத்து எடுத்த உருண்டைகளை அதில் போடவும்
  17. 2 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை ஆப் செய்யவும்
  18. பொரியல் செய்வதற்கு வாழைத்தண்டை முதலில் வட்டவட்டமாக வெட்டிக் கொள்ளவும்
  19. வட்டமாக நறுக்கும் பொழுது நடுவில் இருக்கும் நாரை நீக்கி விட வேண்டும்
  20. பிறகு இதை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
  21. பயத்தம் பருப்பை ஊற வைத்து பொடியாக நறுக்கிய வாழைத்தண்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்
  22. உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
  23. இதை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  24. அடுப்பில் வாணலியை வைத்து கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்
  25. இப்போது வாழைத்தண்டை அதில் சேர்க்கவும்.
  26. லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்
  27. நன்றாக வெந்ததும் அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்