வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சாதம்

Photo of Coconut rice by Fathima Beevi at BetterButter
93
1
0.0(0)
0

தேங்காய் சாதம்

Sep-11-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சாதம் செய்முறை பற்றி

தேங்காய் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய் துருவல் - 1/4 கப்
  2. சாதம்- 1 கப்
  3. பச்சை மிளகாய்-2- நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்
  4. காய்ந்த மிளகாய் வற்றல்- 2
  5. கடுகு- 1/4 டீ ஸ்பூன்
  6. கடலை பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
  7. வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
  8. கருலேப்பில்லை- சிறிதளவு
  9. கொத்தமல்லி இலை- சிறிதளவு
  10. தேங்காய் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  11. பெருங் காயத்தூள்- ஒரு சிட்டிகை
  12. உப்பு- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.
  2. இதனுடன் கடலை பருப்பு மற்றும்  வேர்க்கடலை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
  3. பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், கருலேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், பெருங் காயத்தூள் சேர்த்து கிளறவும்.
  5. ஒரிரு நிமிடம் நன்கு வதங்கியதும்  சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  6. மிதமான சூட்டில் ஒரு 5 நிமிடங்கள் நன்கு கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.
  7. சூடான தேங்காய் சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்