வீடு / சமையல் குறிப்பு / வாழை பழ அகர் அகர் புட்டிங்

Photo of Banana agar agar pudding by Adaikkammai Annamalai at BetterButter
1273
3
0.0(0)
0

வாழை பழ அகர் அகர் புட்டிங்

Sep-11-2018
Adaikkammai Annamalai
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழை பழ அகர் அகர் புட்டிங் செய்முறை பற்றி

இது பிள்ளைகளுக்கு பிடித்த மிக சிறந்த ஜெல்லி புட்டிங் ,, இதை நான் அச்சில் சாய்த்து பால் சேர்த்து செய்துளேன் ,, மிகவும் சுவையான ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழை பழம் - 2
  2. திராட்சை - சிறிது
  3. பால் - 1 கப்
  4. அகர் அகர் - சிறிது
  5. சர்க்கரை - 1/2 கப்
  6. சிகப்பு , பச்சை கலர் எஸ்ஸென்ஸ்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
  2. பின்னர் ஒரு அகல பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணியை காய வைத்து அதில் அகர் அகரை வெட்டி போட வேண்டும்
  3. பின் அதை நன்றாக கலக்கி விடவும் கரையும் வரை ,, கரைந்த பின் அடுப்பை அணைத்து இறக்கி வையக்கவும்
  4. இந்த தண்ணியை மூணு பாகமாக பிரிக்க வேண்டும் அதில் ஒன்றில் பச்சை நிற கலவை, இன்னொன்றில் சிவப்பு, இன்னும் ஒன்றை அப்படியே வைத்து கொள்ளவும்
  5. முதலில் அடிமட்டம் தயார் செய்ய சிகப்பு எடுத்து பூக்களின் இதழில் சேர்த்து 20 நிமிடம் பிரீஸ் செய்யவும்
  6. பின் கீழே தண்டிற்கு பச்சை நிறம் கொடுத்து 20 நிமிடம் பிரீஸ் செய்யவும்
  7. பின் அடுத்த மட்டத்தை வாழை பழம் மற்றும் திராட்சையை அடுக்கவும்
  8. பிறகு எந்த கலவையும் சேர்க்காமல் வைத்திருக்கும் வெள்ளை அகர் அகர் தண்ணியை எடுத்தி மெதுவாக ஊற்றி சேர்த்து 10 நிமிடம்பிரீஸ் செய்யவும்
  9. பிரீஸ் பண்ணிய பிறகு எடுத்தால்.இது போல் இருக்கும்
  10. அதன் பிறகு வாழை பழத்தை ப்ளேன்ட் செய்யவும்
  11. ஒரு கப் பால் காய்ச்சி அதில் சிறிது அகர் அகர் சேர்த்து கரைய விடவும்
  12. பின்னர் அதில் மெதுவாக சர்க்கரை சேர்த்து ப்ளேன்ட் செய்து அகர் அகர் பால் சேர்க்கவும்
  13. வாழை பழ பால் மட்டம் தயார், இப்பொழுது இதை ஏற்கனவே பிரீஸ் செய்த ஜெல்லி யுடன் சேர்க்கவும்
  14. அதன் பிறகு பிரீஸி செய்யவும் 20 நிமிடம்
  15. சுவையான கொலு.மொழு ரோஸ் ஜெல்லி தயார்
  16. அதில் ஒரு பாகம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்