வீடு / சமையல் குறிப்பு / கடாய் மட்டன் கறி மற்றும் பரோட்டா

Photo of Kadaai Mutton Gravy With Paratha by Bena Aafra at BetterButter
362
3
5.0(0)
0

கடாய் மட்டன் கறி மற்றும் பரோட்டா

Sep-13-2018
Bena Aafra
155 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
105 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடாய் மட்டன் கறி மற்றும் பரோட்டா செய்முறை பற்றி

பரோட்டாவும் கடாய் மட்டன் கறியும்...

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரோட்டா :
  2. மைதா மாவு-1 1/2கப்
  3. உப்பு -தேவைக்கேற்ப
  4. தண்ணீர் -தேவைக்கேற்ப
  5. எண்ணெய் -தேவைக்கேற்ப
  6. முட்டை -1
  7. காய்ச்சின பால்-1/4கப்
  8. சீனி-1/4டீஸ்பூன்
  9. கடாய் மட்டன் கறி :
  10. மட்டன் -1/2கிலோ
  11. சின்ன வெங்காயம் -பொடியாக நறுக்கியது
  12. பச்சை மிளகாய் -1
  13. சீரகம் -1டீஸ்பூன்
  14. மிளகு -1டீஸ்பூன்
  15. தக்காளி -2
  16. இஞ்சி விழுது
  17. பூண்டு விழுது
  18. மிளகாய் தூள் -1/4டீஸ்பூன்
  19. மஞ்சள் தூள் -1/4டீஸ்பூன்
  20. உப்பு -தேவைக்கேற்ப
  21. எண்ணெய்
  22. கொத்தமல்லித்தழை
  23. மல்லித்தூள்-1/4டீஸ்பூன்
  24. மிளகு தூள்

வழிமுறைகள்

  1. பரோட்டா :
  2. மாவில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  3. பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
  4. கொடுக்கப்பட்டுள்ள சீனி, பாலை சேர்த்து பிசைய வேண்டும்.
  5. பின்னர் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.
  6. மாவை நன்றாக பிசைந்து 2மணி நேரம் ஊறவிடவும்.
  7. பிறகு சின்ன உருண்டைகளாக எடுத்து தேய்த்து தாவாவில் போட்டு எடுக்கவும்.
  8. சூடான பரோட்டா தயார்.
  9. கடாய் மட்டன் கறி :
  10. மட்டன் -ஐ சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
  11. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  12. சின்ன வெங்காயம், இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  13. உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கிளறி விடவும்.
  14. மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி விடவும்.
  15. நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
  16. பிறகு சீரகம், மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  17. நன்றாக வதங்கியதும் மட்டன் சேர்த்து கிளறி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  18. நன்றாக கிரேவி கொதித்து, மட்டன் வெந்ததும் சிறிது மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவிவிட்டு இறக்கவும்.
  19. சுவையான கடாய் மட்டன் கறி தயார்.
  20. பரோட்டா உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்