வீடு / சமையல் குறிப்பு / ஆலு கிச்சடி

Photo of Aalu kichadi by Fathima Sujitha at BetterButter
345
0
0.0(0)
0

ஆலு கிச்சடி

Sep-13-2018
Fathima Sujitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆலு கிச்சடி செய்முறை பற்றி

இந்த கிச்சடியின் ருசி தனி தன்மை தான்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெறுத்த ரவை - 1 கப்
  2. உருளைக்கிழங்கு - 2
  3. பெரிய வெங்காயம் - 1
  4. இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  5. தக்காளி - 2
  6. மிளகாய் - 2
  7. கறிவேப்பிலை - தேவைக்கு
  8. மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  10. கர மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
  11. தேங்காய் விழுது - 1 டீஸ்பூன்
  12. நெய் - 3 டேபிள் ஸ்பூன்
  13. தாளிக்க எண்ணெய் - தேவைக்கு
  14. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக் கிழங்கை தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  6. மிளகாய் தூள், மஞ்சள் தூள், கர மசாலா தூள் ,உப்பு (உருளை கிழங்கிலும் உப்பு சேர்த்துள்ளதால் தேவைக்கு ஏற்ப ) சேர்க்கவும்.
  7. இதனுடன், வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
  8. தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  9. பின், அரைத்த தேங்காய் விழுது ஒரு டிஸ்பூனை சேர்க்கவும்.
  10. அதனுடன் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும் .
  11. இறுதியாக இறக்குவதற்கு முன், 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கினால், வித்தியாசமான ருசிவுடன் கூடிய "ஆலு கிச்சடி ரெடி"...!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்