வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி வித் வெஜ்டேபிள் குருமா

Photo of Chappathi with veg kurma by Fathima Sujitha at BetterButter
623
0
0.0(0)
0

சப்பாத்தி வித் வெஜ்டேபிள் குருமா

Sep-14-2018
Fathima Sujitha
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி வித் வெஜ்டேபிள் குருமா செய்முறை பற்றி

காய்கறிகள் சேர்ந்த சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு - 3 க்ளாஸ்
  2. பெரிய வெங்காயம் - 1
  3. இஞ்சி, பூண்டு விழுது - 1 டிஸ்பூன்
  4. பட்டை, ஏலக்காய், கிராம்பு பொடி - 1/4 டீஸ்பூன்
  5. சின்ன தக்காளி - 1
  6. கேரட் - 50 கிராம்
  7. பீன்ஸ் - 50கிராம்
  8. உருளைக்கிழங்கு -50 கிராம்
  9. பச்சை பட்டாணி - சிறிதளவு
  10. மிளகாய் - 2
  11. கறிவேப்பில்லை - சிறிதளவு
  12. கொத்தமல்லி - சிறிதளவு
  13. மிளகாய் தூள் - 1 டிஸ்பூன்
  14. மஞ்சள் தூள் - 1/4 டிஸ்பூன்
  15. மட்டன் மசாலா - 1 டிஸ்பூன்
  16. தேங்காய் - அரை மூடி
  17. பொட்டுக்கடலை - 2 டிஸ்பூன்
  18. எண்ணெய் - தேவையான அளவு
  19. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. "சப்பாத்தி" : முதலில் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  2. அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்த உடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. பின் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து விரித்து சப்பாத்தி கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுத்தால் சுவையான சப்பாத்தி ரெடி..!!
  5. "வெஜ்டேபிள் குருமா" : குக்கரில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
  7. பொடி செய்து வைத்துள்ள பட்டை, ஏலக்காய், கிராம்பு பொடியை சேர்த்து வதக்கவும்.
  8. பச்சை வசணை போன உடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  9. நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
  10. இதனுடன் மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து வதக்வும்.
  11. பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மட்டன் மசலா தூள், உப்பு சேர்க்கவும்
  12. இவை அனைத்தும் நன்கு வதங்கிய உடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை விழுதை இதில் சேர்த்து வதக்கவும்.
  13. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை ஆப் (Off) செய்யவும்.
  14. சுவையான சப்பாத்தி மற்றும் வெஜ்டேபிள் குருமா தயார் ...!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்