வீடு / சமையல் குறிப்பு / முட்டை இடியாப்பம்

Photo of Egg Idiyapam by Munsila Fathima at BetterButter
199
2
0.0(0)
0

முட்டை இடியாப்பம்

Sep-15-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை இடியாப்பம் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இடியாப்பம் 8
  2. வெங்காயம் 2
  3. தக்காளி ஒன்று
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. இஞ்சி பூண்டு விழுது கால் தேக்கரண்டி சிறிது கம்மியாக
  6. முட்டை 3
  7. சிவப்பு மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
  8. மல்லி இலை சிறிது
  9. நெய் கால் தேக்கரண்டி(optional)
  10. எண்ணெய் ,உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
  2. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  4. தக்காளி நன்கு வதங்கிய பின்பு முட்டைகளை உடைத்து அதனுடன் சேர்க்கவும்
  5. முட்டைகளை சேர்த்த பின் நன்கு கிளறி கொண்டே இருக்கவும்
  6. ஒருபுறம் இடியாப்பத்தை நன்கு உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள்
  7. முட்டை முக்கால் வேக்காடு வெந்து வரும் பொழுது உதிர்த்து வைத்த இடியாப்பத்தை அதனுடன் சேர்த்து கிளறுங்கள்
  8. முட்டை இடியாப்பம் நன்கு மசிந்து வரும் பொழுது மேலே தேவை என்றால் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்
  9. மல்லி இலை தூவி சூடாக பரிமாறுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்