வீடு / சமையல் குறிப்பு / இடியாப்பம்

Photo of Idiyaappam by Fathima Sujitha at BetterButter
0
1
0(0)
0

இடியாப்பம்

Sep-15-2018
Fathima Sujitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இடியாப்பம் செய்முறை பற்றி

எளிதில் ஜீரணமாகும் உணவு இடியாப்பம்..!!

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • ఆవిరికి
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இடியாப்ப மாவு - 2 கப்
  2. உப்பு - தேவையான அளவு
  3. தண்ணீர் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இடியாப்ப மாவு தயாரிக்கும் முறை : பச்சரிசியை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் அதை நீர் இல்லாமல் வடித்து எடுத்து கொள்ளவும்.
  3. மாவு அரைக்கும் மில்லில் கொடுத்து அரைத்து வறுத்து எடுத்து வாங்கி கொள்ளவும்.
  4. பின் அதை மாவு அரத்தில் அரத்தி எடுத்து கொண்டு சமையலுக்கு பயன்படுத்தவும். ( கடையில் வாங்கும் அரிசி மாவை விட வீட்டில் செய்து இடியாப்பம் செய்தால் நன்றாக இருக்கும்) .
  5. இடியாப்பம் செய்முறை : ஒன்றிற்கு 2 மடங்கு அளவு தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  6. இடியாப்ப மாவை கிளற ஏதுவாக இருக்கும் ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
  7. அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
  8. கொதிக்க வைத்துள்ள தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி இடியாப்ப மட்டையால் நன்கு கிளறவும்.
  9. கட்டி பிடித்து விடாமல் பார்த்து கொள்ளவும்.
  10. நன்கு கிளறி கட்டி இல்லாமல் எடுத்ததும், இடியாப்ப உரலில் சிறு உருண்டை அளவு மாவை எடுத்து வைத்து இடியாப்ப தட்டில் பிளிந்து இட்லி பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பதை போல் அவித்து எடுக்கவும்.
  11. இடியாப்பத்துடன் தேங்காய் பால், சர்க்கரை, பழம் சேர்த்து பரிமாறவும் ...!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்