வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி நூடுல்ஸ்

Photo of Chappati noodles by Kathija Lathif at BetterButter
282
1
0.0(0)
0

சப்பாத்தி நூடுல்ஸ்

Sep-15-2018
Kathija Lathif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி நூடுல்ஸ் செய்முறை பற்றி

An easy recipie made in no time fit for all

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சப்பாத்தி 4
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. குடைமிளகாய் ஒன்று
  5. கேரட் ஒன்று
  6. கறி மசாலா பொடி ஒரு டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 4 டீஸ்பூன்
  11. கொத்தமல்லி தழை அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. சப்பாத்தியை நூடுல்ஸ் வடிவில் நீளமாக மெல்லியதாக கட் செய்து கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளி குடமிளகாய் வகைகளையும் நீளமாக மெல்லியதாக அரிந்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  4. வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின்பு பொடி வகைகளை சேர்க்கவும்
  5. பச்சை வாடை போனதும் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக தக்காளி மசியும் வரை வதக்கவும்
  6. அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்
  7. என்னை பிரிய ஆரம்பித்தவுடன் சப்பாத்தியை அதில் சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும்
  8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி நன்றாக பிரட்டி சூடாக பரிமாறவும்
  9. குழந்தைகளுக்கு விருப்பப்பட்டால் கடைசியாக அதில் சிறிது தக்காளி சாஸ் ஊற்றி பிரட்டி கொடுக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்