வீடு / சமையல் குறிப்பு / பூண்டு சட்னி

Photo of Garlic chutney by Vinothini Manoharan at BetterButter
452
1
0.0(0)
0

பூண்டு சட்னி

Sep-16-2018
Vinothini Manoharan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூண்டு சட்னி செய்முறை பற்றி

Tasty and spicy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நல்லெண்ணெய் 5 டேபிள்ஸ்பூன்
  2. சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கியது 6
  3. பூண்டு 20 முதல் 25 பல் வரை
  4. வரமிளகாய் 8 அல்லது 10
  5. புளி சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் தேவைப்பட்டால்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சிறிய வெங்காயம் பூண்டு வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்
  2. மிதமான சூட்டில் வதக்கவேண்டும் 2 முதல் 3 நிமிடம் போதுமானது
  3. சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து புளி மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைக்க வேண்டும்
  4. பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைபோல அரைத்துக் கொள்ள வேண்டும்
  5. பிறகு அதே கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக கலக்க வேண்டும்
  6. இரண்டு நிமிடத்திற்கு மேல் வேண்டாம் ...
  7. தோசை இட்லியுடன் பூண்டு சட்னி சுவையாக இருக்கும்
  8. தேவைப்பட்டால் பிடித்தவர்கள் தேங்காய் எண்ணெயை ஒரு tsp மேலாக ஊற்றி ￰சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்