வீடு / சமையல் குறிப்பு / பௌளினுள் ஷவர்மா

Photo of Shawarma in a bread bowl by Sumaiya Arafath at BetterButter
575
4
0.0(0)
0

பௌளினுள் ஷவர்மா

Sep-16-2018
Sumaiya Arafath
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பௌளினுள் ஷவர்மா செய்முறை பற்றி

பீட்டா ரொட்டிக்கு பதிலாக பீட்டா பௌளில் தயாரித்த ஷவர்மா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • மிடில் ஈஸ்டர்ன்
  • பேக்கிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறைச்சி ஊறவைக்க:
  2. இரைச்சி(பீப் (அ) மட்டன்(அ) சிக்கன்)-1/2 கிலோ
  3. கெட்டி தயிர்- 1/4
  4. வெள்ளை நல்லமிளகு 1/2 தே.க
  5. கரம் மசாலா 2 தே.க
  6. சீரகத்தூள் 1/2 தே.க
  7. எலுமிச்சை
  8. எண்ணை 2 மே.க
  9. வெங்காயம் 1/2
  10. புதினா 2 தே.க
  11. உப்பு
  12. தஹினி சாஸ் தே.பொருட்கள்:
  13. வெள்ளை எள -1/2 கப்
  14. எண்ணை 1/4 கப்
  15. எலுமிச்சை சாறு
  16. உப்பு
  17. பூண்டு பல் 4
  18. ந.மிளகாய் 1/4 தே.க
  19. பிரட் பொள் செய்ய தே.பொருட்கள்;
  20. மைதா -2கப்
  21. ஈஸ்ட் -1 தே.க
  22. பேக்கிங் தூள் 1/4 தே.க
  23. தயிர் 4 மே .க
  24. நக சூடு தண்ணீர் தேவைக்கு
  25. சர்க்கரை 2 தே.க
  26. உப்பு தேவைக்கு
  27. சலாட் தே.பொருட்கள்;
  28. வெங்காயம் நறுக்கியது1
  29. முட்டைக்கோஸ் நறுக்கியது 1 கப்
  30. தக்காளி நறுக்கியது 1/2
  31. பச்சை மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. பிரட் பௌள் செய்முறை:
  2. சிறு பாத்திரத்தில் சர்க்கரை,ஈஸ்ட் மற்றும் தண்ணீரை மிக்ஸ் செய்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்
  3. மைதா மாவு, ஈஸ்ட் கலவை, தயிர்,உப்பு ,எண்ணை சேர்த்து நன்றாக பிசைந்து 3 மணிநேரம் மூடி வைக்கவும்
  4. மூன்று மணி நேரம் கழித்து மாவு நன்றாக உப்பி வரும்
  5. அதில் இரண்டு பால் எடுத்து அதை பரத்தவவும்
  6. ஒன்றை பௌள் போல் செய்யவும்
  7. சவர்மா கலவையை (இறைச்சியை )இதனுள் வைக்கவும்.
  8. இதன் மேல் பரத்தி வைத்திருக்கும் மாவை வைத்து மூடவும்
  9. பிறகு முட்டை கலவையால் பிரஷ் செய்து வெள்ளை எள் தூவவும்
  10. பிறகு சூடு செய்யப்பட்ட ஓவனில் 170 டிகிரி வெப்பத்தில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  11. ஷவர்மா செய்முறை:
  12. இறைச்சி சுத்தம் செய்து வைக்கவும்
  13. மிக்ஸியில் தயிர்,மசால பொருட்கள் ,வெங்காயம்,உப்பு போட்டு அடித்து வைத்து இறைச்சியில் பிரட்டி வைக்கவும்
  14. தேவைக்கு எலுமிச்சை சாறுசேர்த்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்
  15. பிறகு ஒரு பேனில் சிறுது எண்ணை ஊற்றி ஊறவைத்த இறைச்சியை வேகவைத்து எடுக்கவும்.
  16. தஹினி சாஸ் செமய்முறை:
  17. வெள்ளை எள்ளை சிறிது வறுக்கவும்
  18. மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்
  19. பிறகு எண்ணெயில் எலுமிச்சை சாறு ,உப்பு, பூண்டு, நல்ல மிளகு போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்
  20. சாஸ் ஆகும் வரை மிக்ஸியை ஓட விடவும்.
  21. தேவைப்பட்டால் 2 துண்டு ஐஸ்கட்டிகள் சேர்த்து அடிக்கலாம்
  22. சலாட் செய்முறை;
  23. வெங்காயம் ,தக்காளி, பச்சைமிளகாய், முட்டைகோஸ் எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்