Photo of Parotta by Fathima Sujitha at BetterButter
369
0
0.0(0)
0

பரோட்டா

Sep-16-2018
Fathima Sujitha
100 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பரோட்டா செய்முறை பற்றி

மிருதுவாக பிஸ்கெட் போல் சுவை வேண்டும் என்றால் இப்படி செய்து பாருங்க..

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா - கால் கிலோ
  2. முட்டை - 1
  3. பால் - தேவையான அளவு
  4. சர்க்கரை - 1/2 டிஸ்பூன்
  5. சோடா உப்பு - ஒரு சிட்டிகை
  6. நெய் - தேவையான அளவு
  7. எண்ணெய் - தேவையான அளவு
  8. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அகலமான பாத்திரத்தில் மைதா மாவை எடுத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு முட்டையை உடைத்து அதில் ஊற்றவும்.
  3. அதில் சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  4. அதனுடன் சோடா உப்பு சேர்க்கவும்.
  5. பால் தேவையான அளவு ஊற்றவும்.
  6. இதனுடன் நெய் 3 டிஸ்பூன் ஊற்றி நன்கு பிசையவும்.
  7. தேவைக்கு தண்ணீர் ஊற்றி பிசையவும்.
  8. நன்கு பிசைந்தால் தான் பரோட்டா Soft ஆக இருக்கும்.
  9. நன்கு பிசைந்ததும், எண்ணெய் தடவி மேலே ஒரு Cotton ஈர துணியை போட்டு 1 மணி நேரம் ஊற விடவும்.
  10. பின் மாவு நன்கு ஊறியதும் சிறு உருண்டைகளாக எடுத்து கொள்ளவும்.
  11. ஆயிலை தொட்டு மாவை பரத்தி, லெயர் லெயர்களாக மடக்கி சுற்றி எடுத்து கொள்ளவும்.
  12. அதை வட்டமாக விரித்து தோசை கல்லில் போடவும்.
  13. இரு பக்கமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
  14. பிஸ்கெட் போல ருசியில் பரோட்டா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்