வீடு / சமையல் குறிப்பு / ஆட்டா கார்லிக் சீஸ் பிரட்

Photo of Atta garlic cheese bread by Surya Rajan at BetterButter
410
0
0.0(0)
0

ஆட்டா கார்லிக் சீஸ் பிரட்

Sep-17-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆட்டா கார்லிக் சீஸ் பிரட் செய்முறை பற்றி

கோதுமை மாவு பட்டர் கொண்டு செய்யப்படும் சுவையான ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மைக்ரோவேவிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. ஈஸ்ட் ஒரு ஸ்பூன்
  3. சர்க்கரை அரை ஸ்பூன்
  4. பட்டர் 4 ஸ்பூன்
  5. பூண்டு 10 பல்
  6. உப்பு சிறிதளவு
  7. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  8. துருவிய சீஸ் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஈஸ்ட் யை ஆக்டிவேட் செய்ய .....வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்து வைக்கவும்
  2. ஐந்து நிமிடத்தில் ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகிவிடும்
  3. பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு தேவையான உப்பு ஈஸ்ட் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  4. பின் அதன் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி ஈரமான துணி கொண்டு மூடி இரண்டு மணி நேரம் வைக்கவும்
  5. ஒரு பாத்திரத்தில் பட்டரை உருக்கி அதில் துருவிய பூண்டு சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து வைக்கவும்
  6. மாவு இரண்டு மடங்காக ஆனதும் அதனை சப்பாத்திக் கல்லில் வைத்து நீள வடிவமாக திக்காக தேய்க்கவும்
  7. பின் அதன் மேல் பட்டர் கலவையை வைத்து துருவிய சீஸ் வைத்து மடக்கவும்
  8. பின்கக்தியைக் கொண்டு நீளவாக்கில் மெதுவாக கோடுகள் விடவும்
  9. பின் அதன் மேல் மீதமுள்ள பட்டர் கலவையை கொண்டு பிரஷ் செய்யவும்
  10. மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்