மைசூர் போண்டா அல்லது உளுந்து போண்டா | Mysore Bonda or Ulundu Bonda in Tamil

எழுதியவர் Divya   |  24th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mysore Bonda or Ulundu Bonda by Divya  at BetterButter
மைசூர் போண்டா அல்லது உளுந்து போண்டாDivya
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

287

0

மைசூர் போண்டா அல்லது உளுந்து போண்டா recipe

மைசூர் போண்டா அல்லது உளுந்து போண்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Mysore Bonda or Ulundu Bonda in Tamil )

  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • சுவைக்கேற்ற உப்பு
  • பெருங்காயம் ஒரு சிட்டிகை
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • நறுக்கப்பட்ட தேங்காய் பத்தைகள் - 1 தேக்கரண்டி
  • மிளகு - 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 4 எண்ணிக்கை பொடியாக நறுக்கப்பட்டது
  • பச்சரிசி - 1 தேக்கரண்டி
  • உளுந்து - 200 கிராம்

மைசூர் போண்டா அல்லது உளுந்து போண்டா செய்வது எப்படி | How to make Mysore Bonda or Ulundu Bonda in Tamil

  1. உளுந்தையும் பச்சரிசியையும் கழுவி 1/2 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. தண்ணீரை வடிக்கட்டி அவற்றை அடர்த்தியான பஞ்சுபோன்ற பாத்திற்கு மாவை அரைத்துக்கொள்ளவும், மிகக் குறைவானத் தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பையும் சேர்த்து.
  3. மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட தேங்காய் பத்தைகள், மிளகு, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துகொள்ளவும். உப்பு சரிபார்க்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, உங்கள் விரல்களை நனைத்துக்கொண்டு சிறிய அளவில் மாவை எடுத்து நடுத்தர அளவிலான உருண்டைகளைப் பிடித்துக்கொள்ளவும்.
  5. இப்போது எண்ணெய் சூடாகிவிட்டா என்பதை சிறிதளவு மாவை எண்ணெயில் விட்டுப் பார்க்கவும், மாவு உடனே மேலெழும்பினால் பொரிப்பதற்கு எண்ணெய் தயார்.
  6. மெதுவாக உருண்டைகளை எண்ணெயில் விட்டு மேல் பகுதி மொறுப்பாக மாறும்வரைம் கொப்பளிக்கும் எண்ணெயும் அடங்கும்வரையிலும் வேகவைக்கவும்.
  7. சட்னியுடன் அல்லது சாசுடன் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

உளுந்து மாவு அல்லது மாவு அடர்த்தியாக இருக்கவேண்டும். மொறுமொறுப்பான போண்டா வேண்டுமானால் எப்போதும் நினைவில் இருக்கட்டும், மாவு அடர்த்தியாக இருக்கவேண்டும் என்று. தண்ணீர் போல் இருக்கக்கூடாது. எண்ணெயில் வெப்பநிலையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிகச் சூடாக இருக்கக்கூடாது.

Reviews for Mysore Bonda or Ulundu Bonda in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.