Photo of Sambar idly by Rabia Hamnah at BetterButter
487
1
0.0(1)
0

Sambar idly

Sep-17-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி மாவு தேவைக்கு
  2. பாசிப்பருப்பு அரை கப்
  3. துவரம் பருப்பு அரை கப்
  4. சின்ன வெங்காயம் 6
  5. தக்காளி ஒன்று
  6. பச்சை மிளகாய் 2
  7. கறிவேப்பிலை ஒரு கொத்து
  8. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  9. சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்
  10. புளி கரைசல் 2 டேபிள்ஸ்பூன்
  11. உப்பு தேவைக்கு
  12. வெல்லம் ஒரு ஸ்பூன்
  13. நெய் 2 ஸ்பூன்
  14. தாளிக்க தேவையானவை
  15. கடுகு ஒரு ஸ்பூன்
  16. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  17. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  18. பெருங்காயத் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும்வரை வேக வைக்கவும்
  2. குக்கரில் ஆவி அடங்கியதும் வேகவைத்தவற்றை மசித்து வைக்கவும்
  3. பின்பு சாம்பார் பொடி யுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்
  4. கலந்து வைத்த சாம்பார் பொடியை குக்கரில் இருக்கும் பருப்புடன் சேர்க்கவும்
  5. பின்பு உப்பு, வெல்லம் ,புளி கரைசல் சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.
  6. பின்பு எண்ணெயைக் காயவைத்து தாளிக்க கூறியவற்றைத் சேர்த்து தாளித்து பருப்புடன் சேர்த்து கலந்து வைக்கவும்.
  7. இப்பொழுது மினி இட்லி தட்டில் சிறிது எண்ணெய் சேர்த்து தடவிக் கொண்டு இட்லி மாவை அதில் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்
  8. பின்பு ஒரு கிண்ணத்தில் இட்லியை சேர்த்து மேலே சாம்பாரை ஊற்றி நெய் சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து பின்பு பரிமாறவும்.
  9. சுவையான சாம்பார் இட்லி தயார் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Abdul Basith
Sep-18-2018
Abdul Basith   Sep-18-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்