Photo of Carrot Dosa by Vaishnavi Prakash at BetterButter
667
0
0.0(0)
0

கேரட் தோசை

Sep-17-2018
Vaishnavi Prakash
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கேரட் தோசை செய்முறை பற்றி

அரிசி பருப்பு கேரட் மற்றும் இஞ்சி சேர்த்து செய்யப்படும் ஆரோக்கியமான தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சை அரிசி ஒரு கப்
  2. இட்லி அரிசி ஒரு கப்
  3. துவரம் பருப்பு அரை கப்
  4. உளுத்தம் பருப்பு அரை கப்
  5. கேரட் 4 அல்லது 5
  6. இஞ்சி சிறிதளவு
  7. பெருங்காயத் தூள் கால் தேக்கரண்டி
  8. காய்ந்த மிளகாய் 8
  9. சோம்பு ஒரு தேக்கரண்டி
  10. பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது 1 அல்லது சிறிய வெங்காயம் 10 பொடியாக நறுக்கியது
  11. உப்பு தேவையான அளவு
  12. தேங்காய் அரை மூடி
  13. பச்சை மிளகாய் 6 அல்லது 7

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் பருப்புகளை நன்றாக கழுவி குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மிக்ஸியில் காய்ந்த மிளகாய் சோம்பு சேர்த்து பொடிக்கவும்
  3. இதில் ஊற வைத்த அரிசி பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்
  4. கேரட் மற்றும் இஞ்சியின் தோலை எடுத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  5. அரைத்து வைத்துள்ள மாவில் கேரட் விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்
  6. 10 நிமிடம் கழித்து தோசைகளாக சுட்டு எடுக்கவும்
  7. தேங்காய் சட்னிக்கு தேங்காய்.. பச்சை மிளகாய்.. உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும் தேவைப்பட்டால் கடுகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்