சோயா கிரேவி | Soya chunks gravy in Tamil

எழுதியவர் Vinothini Manoharan  |  17th Sep 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Soya chunks gravy by Vinothini Manoharan at BetterButter
சோயா கிரேவிVinothini Manoharan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

0

சோயா கிரேவி recipe

சோயா கிரேவி தேவையான பொருட்கள் ( Ingredients to make Soya chunks gravy in Tamil )

  • சின்ன வெங்காயம் 20
  • எண்ணெய் தேவையான அளவு
  • கடுகு சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • இஞ்சி பூண்டு விழுது 1tsp
  • தக்காளி-2
  • தேங்காய் 1 கப்
  • மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன்
  • மிளகாய்ப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  • கறி மசாலா பொடி ஒரு டீஸ்பூன்
  • மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  • சோயா 20 to 25
  • தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன்
  • மல்லித்தழை சிறிதளவு

சோயா கிரேவி செய்வது எப்படி | How to make Soya chunks gravy in Tamil

  1. அரைப்பதற்கு : தேங்காய் 1 கப் அரைத்து கொள்ளவும் 2 தக்காளி தனியாக அரைத்து கொள்ளவும்.
  2. சோயாவை 20 முதல் 25 நிமிடங்கள் நன்றாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும் பொரிந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்
  5. பிறகு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. அதன் பிறகு அரைத்த தக்காளி விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்
  7. தேங்காய் விழுதை சேர்த்து சோயாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
  8. தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்
  9. கிரேவி பதத்திற்கு வந்த பிறகு கொத்தமல்லித் தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்
  10. கடைசியாக ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி பரிமாறவும்

Reviews for Soya chunks gravy in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.