வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தியும் உருளைக்கிழங்கு சோயா குருமாவும்

Photo of Chapathi, Potato and Soya Kuruma by Jayasakthi Ekambaram at BetterButter
490
0
0.0(0)
0

சப்பாத்தியும் உருளைக்கிழங்கு சோயா குருமாவும்

Sep-18-2018
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தியும் உருளைக்கிழங்கு சோயா குருமாவும் செய்முறை பற்றி

சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கும் சோயாவும் சேர்த்து செய்த குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு 2 கப்
  2. உப்புத்தூள் ஒரு ஸ்பூன்
  3. எண்ணெய் 4 ஸ்பூன்
  4. குருமா செய்வதற்கு
  5. உருளைக்கிழங்கு 2
  6. வெங்காயம் ஒன்று
  7. தக்காளி-2
  8. எண்ணெய் 4 ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  10. சோம்புத் தூள் ஒரு ஸ்பூன்
  11. தேங்காய் கால் மூடி
  12. கறிவேப்பிலை ஒரு கொத்து
  13. குழம்பு மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
  14. உப்புத்தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை உப்பு தூள் எண்ணெய் கலந்து பிசைந்து ஒரு மணி நேரம் நன்றாக ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்
  2. அந்த நேரத்தில் குருமாவை ரெடி செய்து கொள்ள வேண்டும்
  3. சோயாவை வெந்நீரில் போட்டு எடுத்து குளிர்ந்த நீர் ஊற்றி அதை பிழிந்து கொள்ள வேண்டும்
  4. தேங்காயை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  5. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  6. உருளைக்கிழங்கும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  7. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்
  8. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் சோம்புத் தூள் போட்டு வதக்கவும்
  10. மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
  11. தண்ணீர் கொதித்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு சேர்க்கவும்
  12. உருளைக் கிழங்கு முக்கால் பாகம் வெந்த பிறகு சோயாவை சேர்க்கவும்.
  13. அரைத்த தேங்காயை ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவைத்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை ஆப் செய்யவும்
  14. சப்பாத்தியை திரட்டி தோசைக்கல்லில் இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்
  15. கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து சப்பாத்திக்கு சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்