வீடு / சமையல் குறிப்பு / மட்டா அரிசி அவல் உருளைக் கிழங்கு உப்புமா

Photo of Potatoes RiceFlakes Uppuma by Bena Aafra at BetterButter
244
1
0.0(0)
0

மட்டா அரிசி அவல் உருளைக் கிழங்கு உப்புமா

Sep-18-2018
Bena Aafra
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மட்டா அரிசி அவல் உருளைக் கிழங்கு உப்புமா செய்முறை பற்றி

உருளைக் கிழங்கு அவல் உப்புமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மட்டா அரிசி அவல்-1கப்
  2. சின்ன வெங்காயம் -பொடியாக நறுக்கியது
  3. தக்காளி -1
  4. கடுகு -1/4டீஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு -1/4டீஸ்பூன்
  6. கடலைப் பருப்பு -1டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் -1/4டீஸ்பூன்
  8. மிளகாய் தூள் -1/4டீஸ்பூன்
  9. வேர்க்கடலை பருப்பு -1டீஸ்பூன்
  10. கறிவேப்பிலை
  11. பச்சை மிளகாய் -2
  12. உருளைக் கிழங்கு -2வேகவைத்து மசித்தது
  13. எண்ணெய்
  14. உப்பு

வழிமுறைகள்

  1. மட்டா அரிசி அவல் -ஐ சிறிது தண்ணீரில் கலைந்து வைத்து கொள்ளவும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை மிளகாய் சேர்க்கவும்.
  4. கடலைப் பருப்பு, வேர்க்கடலை பருப்பு சேர்த்து தாழிக்கவும்.
  5. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
  7. பிறகு சிறிது மஞ்சள் தூள், உப்பு,மிளகாய் தூள்,சேர்த்து கிளறி விடவும்.
  8. மசித்த உருளைக் கிழங்கு சேர்த்து கிளறி விட்டு அரிசி அவல் -ஐ சேர்த்து கிளறி விடவும்.
  9. நன்றாக அவல் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
  10. மட்டா அரிசி அவல் உப்புமா ரெடி!
  11. சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்