வீடு / சமையல் குறிப்பு / சாச்சி சட்னி

Photo of Chachi Chutney by Fathima Sujitha at BetterButter
288
1
0.0(0)
0

சாச்சி சட்னி

Sep-18-2018
Fathima Sujitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாச்சி சட்னி செய்முறை பற்றி

சட்னிகள் பல விதம் ..அதில் இது ஒரு விதம் ...தனித்துவ சுவையுடையது..!!

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சின்ன வெங்காயம் - 50 கிராம்
  2. தக்காளி - 2
  3. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  4. மிளகாய் வத்தல் - 4 (காரத்திற்கு ஏற்றார் போல)
  5. கறிவேப்பில்லை - ஒரு கை பிடி
  6. தேங்காய் - சிறியது அரை மூடி
  7. பூடு - 10 பல்
  8. எண்ணெய் - தேவையான அளவு
  9. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வெங்காயம், தக்காளியை கட் பண்ணி வைத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் தக்காளி சேர்க்கவும்.
  4. சிவப்பு மிளகாய் வத்தல், ,பூடு ,கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  5. இவை நன்கு வதங்கியதும், தேங்காய் சேர்த்து வதக்கவும்.
  6. இதனுடன் புளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  7. நன்கு வதங்கியதும் சூடு ஆற விடவும்.
  8. பின் இவற்றை அம்மி அல்லது மிக்ஸியில் நன்கு மையாக அரைக்கவும்.
  9. அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும்.
  10. துவையல் மாதிரியும் இல்லாமல், ரொம்ப தண்ணியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும்.
  11. தனித்துவ சுவையுடன் "சாச்சி சட்னி"தயார்..!!
  12. இதனை தோசை, இட்லி, சப்பாத்தி, சாதமுடனும் பரிமாறலாம் ...!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்