வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி மற்றும் உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா மற்றும் மாதுளை பழம்

Photo of Chappathi and potato peas masala and pomegranate fruits by sudha rani at BetterButter
476
0
0.0(0)
0

சப்பாத்தி மற்றும் உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா மற்றும் மாதுளை பழம்

Sep-19-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி மற்றும் உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா மற்றும் மாதுளை பழம் செய்முறை பற்றி

இரவு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சப்பாத்தி செய்ய:
  2. ஆசிர்வாத் மல்ட்டி கிரைண்ட் ஆட்டா மாவு 1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. தண்ணீர் தேவையான அளவு
  5. எண்ணெய் சிறிதளவு
  6. மசாலா செய்ய:
  7. உருளைக்கிழங்கு 6
  8. பட்டாணி 1 கப்
  9. பெரிய வெங்காயம் நறுக்கியது 2
  10. தக்காளி நறுக்கியது 3
  11. பச்சைமிளகாய் 2
  12. வரமிளகாய் 2
  13. கறிவேப்பிலை சிறிது
  14. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
  15. சீரகத்தூள் 1 ஸ்பூன்
  16. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  17. சாம்பார் தூள் 1-1/2 ஸ்பூன்
  18. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  19. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  20. கடுகு 1 டேபிள்ஸ்பூன்
  21. கடலைப் பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  22. உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  23. உப்பு தேவையான அளவு
  24. நெய் 1 ஸ்பூன்
  25. தேங்காய் பால் 1 கப்

வழிமுறைகள்

  1. மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொண்டு அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் சப்பாத்தியாக திரட்டி சூடான கல்லில் இருபுறம் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்
  2. உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா:
  3. பட்டாணியை வேகவைத்து வைக்கவும் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து வைக்கவும்
  4. வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்
  6. பின் வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சைமிளகாய் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  7. பின் மசித்த உருளைக்கிழங்கு பட்டாணி சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சாம்பார் பொடி சீரகத்தூள் மல்லித்தூள் சேர்த்து சிறிது நேரம் பிரட்டி தேங்காய் பால் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்