மெது வடை | Medu Vada in Tamil

எழுதியவர் Jaya Rajesh  |  26th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Medu Vada by Jaya Rajesh at BetterButter
மெது வடைJaya Rajesh
  • ஆயத்த நேரம்

    2

    1 /4 மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

89

0

மெது வடை recipe

மெது வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Medu Vada in Tamil )

  • 1/4 தேக்கரண்டி கடுக
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • அரைப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர்
  • சுவைக்கு உப்பு
  • 2 தேக்கரண்டி எண்ணெய் பொரிப்பதற்கு
  • 1 சிறிய துண்டு புளி
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 தேக்கரண்டி தோல் நீக்கப்பட்ட துவரம் பருப்பு
  • 1 தேக்கரண்டி தோலெடுத்த கருப்பு உளுந்து
  • 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கப்பட்ட புதினா இலைகள்
  • 2 தேக்கரண்டி கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
  • 3 தேக்கரண்டி தேங்காய் துருவல்
  • சட்னிக்கு:
  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • கைகளை நனைக்க தண்ணீர்
  • சுவைக்கேற்ற உப்பு
  • 2 தேக்கரண்டி கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
  • 1 கொத்து கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
  • 1/2 தேக்கரணடி கருமிளகு
  • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கப்பட்டது
  • 1 நடுத்தர அளவு வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  • 1 கப் தோலுரிக்கப்பட்ட கருப்பு உளுந்து கழுவப்பட்டு 1 மணி நேரம் ஊறவைக்கப்பட்டது

மெது வடை செய்வது எப்படி | How to make Medu Vada in Tamil

  1. ஊறவைத்த தோல் நீக்கப்பட்ட கருப்பு உளுந்தை தண்ணீர் சேர்க்காமல் சாந்தாக மென்மையாக, பஞ்சுபோல் ஆகும்வரை அரைத்துக்கொள்ளவும்.
  2. நறுக்கப்பட்ட வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, கருமிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும். உப்பு சேர்த்து சுவையை சரிசெய்யவும்.
  3. இப்போது கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். கைகளை தண்ணீரில் நனைத்து எலுமிச்சை அளவில் மாவைக் கையில் எடுத்து உருண்டைபிடித்து மத்தில் ஒரு பள்ளத்தினை ஏற்படுத்தி கவனமாக எண்ணெயில் விடவும்.
  4. மிதமானச் சூட்டில் உள்ள எண்ணெயில் பொன்னிறமாக, மொறுமொறுப்பாக மாறுவரை பொரிக்கவும்.
  5. சட்னிக்கு:- சட்னிக்கு நான் தோல் நீக்கப்பட்ட கருப்பு உளுந்து, தோல் நீக்கப்பட்ட துவரம் பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் பொன்னிறமாகும்வரை வதக்கிக்கொண்டேன். ஒரு கையளவு கொத்துமல்லி, புதினா இலை, தேங்காய் துருவல், புளி ஆகியவற்றைச் சேர்க்கவும். ஆறியதும் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  6. மீதமுள்ள எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு கறிவேப்பிலை சேர்த்து, சட்னியில் ஊற்றிக்கொள்ளவும்.

Reviews for Medu Vada in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.