Photo of Medu Vada by Jaya Rajesh at BetterButter
1524
18
0.0(0)
0

மெது வடை

Jun-26-2016
Jaya Rajesh
130 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1 கப் தோலுரிக்கப்பட்ட கருப்பு உளுந்து கழுவப்பட்டு 1 மணி நேரம் ஊறவைக்கப்பட்டது
  2. 1 நடுத்தர அளவு வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  3. 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கப்பட்டது
  4. 1/2 தேக்கரணடி கருமிளகு
  5. 1 கொத்து கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
  6. 2 தேக்கரண்டி கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
  7. சுவைக்கேற்ற உப்பு
  8. கைகளை நனைக்க தண்ணீர்
  9. பொரிப்பதற்கு எண்ணெய்
  10. சட்னிக்கு:
  11. 3 தேக்கரண்டி தேங்காய் துருவல்
  12. 2 தேக்கரண்டி கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
  13. 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கப்பட்ட புதினா இலைகள்
  14. 1 தேக்கரண்டி தோலெடுத்த கருப்பு உளுந்து
  15. 1 தேக்கரண்டி தோல் நீக்கப்பட்ட துவரம் பருப்பு
  16. 2 காய்ந்த மிளகாய்
  17. 1 சிறிய துண்டு புளி
  18. 2 தேக்கரண்டி எண்ணெய் பொரிப்பதற்கு
  19. சுவைக்கு உப்பு
  20. அரைப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர்
  21. கறிவேப்பிலை கொஞ்சம்
  22. 1/4 தேக்கரண்டி கடுக

வழிமுறைகள்

  1. ஊறவைத்த தோல் நீக்கப்பட்ட கருப்பு உளுந்தை தண்ணீர் சேர்க்காமல் சாந்தாக மென்மையாக, பஞ்சுபோல் ஆகும்வரை அரைத்துக்கொள்ளவும்.
  2. நறுக்கப்பட்ட வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, கருமிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும். உப்பு சேர்த்து சுவையை சரிசெய்யவும்.
  3. இப்போது கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். கைகளை தண்ணீரில் நனைத்து எலுமிச்சை அளவில் மாவைக் கையில் எடுத்து உருண்டைபிடித்து மத்தில் ஒரு பள்ளத்தினை ஏற்படுத்தி கவனமாக எண்ணெயில் விடவும்.
  4. மிதமானச் சூட்டில் உள்ள எண்ணெயில் பொன்னிறமாக, மொறுமொறுப்பாக மாறுவரை பொரிக்கவும்.
  5. சட்னிக்கு:- சட்னிக்கு நான் தோல் நீக்கப்பட்ட கருப்பு உளுந்து, தோல் நீக்கப்பட்ட துவரம் பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் பொன்னிறமாகும்வரை வதக்கிக்கொண்டேன். ஒரு கையளவு கொத்துமல்லி, புதினா இலை, தேங்காய் துருவல், புளி ஆகியவற்றைச் சேர்க்கவும். ஆறியதும் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  6. மீதமுள்ள எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு கறிவேப்பிலை சேர்த்து, சட்னியில் ஊற்றிக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்