வீடு / சமையல் குறிப்பு / Flower Aapam with minced meat Sherva

Photo of Flower Aapam with minced meat Sherva by Nazeema Banu at BetterButter
889
2
0.0(1)
0

Flower Aapam with minced meat Sherva

Sep-20-2018
Nazeema Banu
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • முகலாய்
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூ ஆப்பம் செய்ய
  2. இரண்டு கப் ப.அரிசி
  3. அரை கப் உளுந்து
  4. ஒரு கப் சாதம்
  5. முட்டை 1
  6. உப்பு சிறிது
  7. தே.பால் அரை கப்
  8. கொத்து கறி ஷேர்வாக்கு
  9. கொத்திய கறி கால் கிலோ
  10. இரண்டு பெ.வெங்காயம்
  11. இரண்டு தக்காளி
  12. இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன்
  13. உப்பு தே.அளவு
  14. மி.தூள் தே.அளவு
  15. எண்ணெய் தே.அளவு
  16. மல்லி இலை தே.அளவு

வழிமுறைகள்

  1. ப.அரிசி மற்றும் உளுந்து சேர்ந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்
  2. அதனுடன் சாதம் சேர்த்து அரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.
  3. அந்த மாவில் ஒரு முட்டை.உப்பு.அரை கப் தே.பால் சேர்த்து கலக்கி வைக்கவும்.
  4. ஆப்ப சட்டியை சூடாக்கி ஆயில் தடவி ஒன்றரை கரண்டி மாவை ஊற்றி பூ வடிவம் வருகிற மாதிரி அலசவும்.
  5. சட்டியை மூடி மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும்.
  6. கறி ஷேர்வா செய்ய
  7. எலும்பு இல்லாத கறியை சிறு துண்டுகளாக்கி மிக்சியில் இட்டு அரைக்கவும்.
  8. நைசாக கறியை அரைத்து எடுக்கவும்
  9. வெங்காயம் தக்காளியை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து இஞ்சி பூண்டு விழுது ப.மிளகாய் அரிந்து வைக்கவும்.
  10. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு கலவை சேர்த்து வதக்கவும்.
  11. நன்றாக வதங்கியதும் உப்பு மி.தூள் மற்றும் அரைத்த கறி சேர்த்து கிளறவும்.
  12. கடாயை மூடியால் மூடி சிறு தீயில் வேக விடவும்.
  13. எண்ணெய் பிரியும் வரை அவ்வப்போது திறந்து கிளறி மல்லி இலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
hajirasheed haroon
Sep-20-2018
hajirasheed haroon   Sep-20-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்