வீடு / சமையல் குறிப்பு / இடியாப்பம் மற்றும் பச்சை காய்கறி குருமா

Photo of Idiyappam and Green mixed vegetable Kurma by Divya  at BetterButter
3173
0
0.0(0)
0

இடியாப்பம் மற்றும் பச்சை காய்கறி குருமா

Sep-20-2018
Divya
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இடியாப்பம் மற்றும் பச்சை காய்கறி குருமா செய்முறை பற்றி

பாரம்பரிய இடியாப்பமும் தொட்டுக்கொள்ள சுவையான தேங்காய், பச்சைமிளகாய் ,கொத்தமல்லி ,சேர்த்து அரைத்த பச்சை நிற காய்கறி குருமா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இடியாப்பத்திற்கு-
  2. இடியாப்ப மாவு 2 கப்
  3. நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி
  4. உப்பு தேவையான அளவு
  5. சுடு தண்ணீர் தேவையான அளவு
  6. குருமாவிற்கு-
  7. கலந்த காய்கறிகள் -1 1/2 கப் நறுக்கியது(காரட்,பீன்ஸ், ஊருளை,பட்டாணி, காலிபிளவர்)
  8. தக்காளி-2 நறுக்கியது
  9. வெங்காயம்-2 நீளவாக்கில் நறுக்கியது
  10. பட்டை ,லவங்கம், ஏலக்காய் ,பிரிஞ்சி இலை தலா 2
  11. சோம்பு ஒரு டீஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் 2 தேக்கரண்டி
  14. மசாலா அரைப்பதற்கு-
  15. தேங்காய் 1/2 கப்
  16. பச்சை மிளகாய் 5
  17. இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
  18. பூண்டு 4 பற்கள்
  19. கொத்தமல்லி சிறிதளவு
  20. தனியாத்தூள் 3 தேக்கரண்டி
  21. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  22. கசகசா ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. இடியாப்பம் செய்ய-
  2. ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவு ,உப்பு ,நல்லெண்ணெய் சேர்த்து அதனோடு சுடு தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து மிருதுவான மாவு பிசைந்து கொள்ளவும்.
  3. இந்த மாவை இடியாப்ப அச்சில் வைத்து இடியாப்பம் பிழிந்து ஆவியில் 5 நிமிடம் வரை வேக வைக்கவும்.
  4. குருமா செய்முறை:
  5. குருமா மசாலா விற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு ,பட்டை ,லவங்கம் ஏலக்காய் ,பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனோடு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்க்கவும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
  8. அரைத்து வைத்துள்ள விழுதை அதில் கலக்கவும்.
  9. தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  10. குக்கரை மூடி 3 விசில் வரை வேக விடவும்.
  11. கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்