BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / இறைச்சி பத்திரி

Photo of Beef pathiri by Sumaiya Arafath at BetterButter
0
2
0(0)
0

இறைச்சி பத்திரி

Sep-20-2018
Sumaiya Arafath
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

இறைச்சி பத்திரி செய்முறை பற்றி

இது ஒரு மலபாரி உணவு

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • కేరళ
  • వేయించేవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பீப் இறைச்சி வேகவைத்தது 1 கப்
  2. ஸ்டபிங் செய்ய தே.பொருட்கள்:
  3. வெங்காயம் 1
  4. ப.மிளகாய் 1
  5. இ.பூண்டு 1 தே.க
  6. கேரட் 1/2 கப்
  7. பீன்ஸ் 1/2 கப்
  8. உ.கிழங்கு 1/2 கப்
  9. மல்லி இலை 1/4 கப்
  10. மிளகாய் தூள் 1 தே.க
  11. மஞ்சளு தூள் 1/4 தே.க
  12. கரம் மசாலா 1/2 தே.க
  13. சீரக தூள் 1/2 தே.க
  14. மல்லி தூள் 1/2 தே.க
  15. பெருஞ்சீரக தூள் 1/2 தே.க
  16. பூரி செய்ய தே.பொருட்கள்;
  17. மைதா+ ஆட்டா மாவு 2 கப்
  18. உப்பு
  19. தண்ணீர்
  20. எண்ணை

வழிமுறைகள்

  1. பீப் இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் சேர்த்து குக்கரில் 5 விசில் போடவும்
  2. தண்ணீரை வடிகட்டவும்
  3. இறைச்சியை மிக்ஸியில் ஒரு அடி அடித்து பொடித்து எடுக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்
  5. பிறகு பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
  6. காய்கறிகளை போட்டு நன்றாக வேக வைக்கவும்
  7. மசாலா தூளை போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்
  8. கொத்திய இறைச்சியைப் போட்டு கிளறி எடுக்கவும்
  9. கடைசியில் மல்லி இலை தூவவும்
  10. ஸ்டஃபிங் ரெடி....
  11. மைதா மாவு ,ஆட்டா மாவு, தண்ணீர் ,உப்பு போட்டு நன்றாக கெட்டியாக பிசைந்து வைக்கவும்
  12. அரை மணிகநேரம் மூடி வைக்கவும்
  13. பூரி போன்று சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  14. உருண்டையை பரத்தி அதனுள் ஸ்டஃப்பிங் வைத்து இன்னொரு மாவு அதன் மேல் வைத்து மூடி வைக்கவும்
  15. சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  16. சுவையான இறைச்சி பத்திரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்