வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி சிக்கன் கிரேவி

Photo of Chappathi chicken gravi by Rajathi Alagarsamy at BetterButter
503
0
0.0(0)
0

சப்பாத்தி சிக்கன் கிரேவி

Sep-20-2018
Rajathi Alagarsamy
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

சப்பாத்தி மற்றும் சிக்கன் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 2 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. ஒரு ஸ்பூன் எண்ணெய்
  4. தண்ணீர் தேவையான அளவு
  5. சிக்கன் கிரேவி செய்ய தேவையானவை
  6. சிக்கன் ஒரு கிலோ
  7. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு சிறிதளவு
  10. தாளிக்க கடுகு சிறிதளவு
  11. கறிவேப்பிலை சிறிதளவு
  12. பெரிய வெங்காயம் ஐந்து
  13. மிளகாய் ஐந்து
  14. சிக்கன் பொடி இரண்டு டீஸ்பூன்
  15. ஏலக்காய்-3
  16. பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை தேவையான அளவு
  17. எண்ணெய் தேவையான அளவு
  18. தேங்காய்ப் பால் ஒரு கப்

வழிமுறைகள்

  1. சப்பாத்தி செய்யும் முறை
  2. முதலில் கோதுமை மாவுடன் சிறிது உப்பு விட்டு தண்ணீர் விட்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. பின்பு அதனை சப்பாத்தி கல்லில் தோய்த்து சப்பாத்தி சுட்டெடுக்கவும்.
  4. கிரேவி செய்யும் முறை
  5. முதலில் சிக்கனை நன்றாக சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
  6. பின்பு கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  7. அதனுடன் வெட்டி வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  8. வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.,
  9. பின்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து நன்றாக வதக்கவும் கூடவே ஏலக்காய் சேர்க்கவும்.
  10. பின்பு அதனுடன் வெட்டி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  11. நன்றாக வகைகளுடன் அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சிக்கன் போடவும்.
  12. நன்றாக வதங்கி வரும் சமயத்தில் அதனுடன் தேங்காய் பால் சேர்க்கவும்.
  13. சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
  14. நன்றாக தண்ணீர் வற்றும் வரை கிரேவியாக செய்யவும்.
  15. அதனுடன் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்