கோபி நூடுல்ஸ் | Gobi Noodles in Tamil

எழுதியவர் Jayasakthi Ekambaram  |  20th Sep 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Gobi Noodles by Jayasakthi Ekambaram at BetterButter
கோபி நூடுல்ஸ்Jayasakthi Ekambaram
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

0

0

கோபி நூடுல்ஸ் recipe

கோபி நூடுல்ஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Gobi Noodles in Tamil )

 • நூடுல்ஸ் 250 கிராம்
 • குடைமிளகாய் ஒன்று
 • கேரட் ஒன்று
 • வெங்காயம் ஒன்று
 • காலிஃப்ளவர் சிறியது 1
 • சில்லி சாஸ் ஒரு டீஸ்பூன்
 • தக்காளி சாஸ் ஒரு டீஸ்பூன்
 • சோயா சாஸ் ஒரு டீஸ்பூன்
 • உப்பு 2 ஸ்பூன்
 • எண்ணை பொரிப்பதற்கு
 • இஞ்சி ஒரு சிறிய துண்டு
 • பூண்டு 4 பற்கள்
 • கான்பிளவர் ஒரு ஸ்பூன்
 • மைதா மாவு ஒரு ஸ்பூன்
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
 • மிளகாய்த்தூள் முக்கால் ஸ்பூன்

கோபி நூடுல்ஸ் செய்வது எப்படி | How to make Gobi Noodles in Tamil

 1. காலிஃப்ளவரை முதலில் குளிர்ந்த நீரில் நன்றாக கழுவவும்
 2. பிறகு சற்று சூடான நீரில் உப்பு கலந்து பத்து நிமிடம் அதில் போட்டு வைக்கவும்
 3. காலிஃப்ளவரை தண்ணீரை வடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்
 4. ஒரு ஸ்பூன் கார்ன் ஃபிளவர் ஒரு டீஸ்பூன் மைதா மாவு ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன் உப்புத்தூள் அனைத்தையும் சேர்த்து காலிஃப்ளவரில் தண்ணீர் தெளித்து கலக்கவும்
 5. இதை அரை மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்
 6. வெங்காயம் குடைமிளகாய் கேரட் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்
 7. இஞ்சி பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்
 8. வாணலியில் எண்ணெய் காயவைத்து காலிஃப்ளவரை அரைமணி நேரம் கழித்து பொரித்தெடுக்கவும்
 9. ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதித்ததும் நூடுல்ஸை அதில் 5 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்
 10. நூடுல்ஸ் நன்றாக வெந்ததும் தண்ணீரை வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் கலந்து விடவும்
 11. வாணலியில் உள்ள எண்ணெயை வடிகட்டி 2 ஸ்பூன் எண்ணை மட்டும் வைக்கவும்.
 12. வாணலியில் உள்ள எண்ணெயில் நன்றாக சூடேறியதும் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும்
 13. பிறகு வெங்காயம் கேரட் குடை மிளகாய் மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும்
 14. காய்கறிகள் 80% நன்றாக வெந்தால் போதும்
 15. பிறகு சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் சோயா சாஸ் போட்டு வதக்கவும்
 16. நூடுல்ஸில் அதில் போட்டு நன்றாக கலக்கவும்
 17. வறுத்தெடுத்த காலிஃபிளவரை பரிமாறும் சமயம் அதில் கலந்து தரவும்

Reviews for Gobi Noodles in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.