வீடு / சமையல் குறிப்பு / கோதுமை பரோட்டா வெள்ளை குருமா

Photo of Wheat Parota with White Kuruma by Vaishnavi Prakash at BetterButter
602
0
0.0(0)
0

கோதுமை பரோட்டா வெள்ளை குருமா

Sep-20-2018
Vaishnavi Prakash
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோதுமை பரோட்டா வெள்ளை குருமா செய்முறை பற்றி

கோதுமையில் செய்யும் பரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு 2 கப்
  2. உப்பு கால் தேக்கரண்டி
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  5. குருமா செய்ய தேவையான பொருட்கள்
  6. வெங்காயம் 2
  7. தக்காளி இரண்டு அல்லது லெமன் சாறு ஒரு தேக்கரண்டி
  8. பச்சை மிளகாய் ஆறு
  9. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  10. பூண்டு 10 பற்கள்
  11. சோம்பு ஒரு தேக்கரண்டி
  12. தேங்காய் துருவியது ஒரு கப்
  13. முழு முந்திரி 5
  14. பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளித்து
  15. கொத்தமல்லி மற்றும் புதினா பொடியாக நறுக்கியது தலா அரை கப்
  16. காலிஃப்ளவர் அல்லது நூல்கோல் அல்லது பட்டாணி அல்லது கலந்த காய்கறிகள் நறுக்கியது ஒரு கப்
  17. எண்ணெய் தேவையான அளவு
  18. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து எடுத்து எண்ணை தடவி வைக்கவும்
  2. 15 நிமிடம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக தேய்க்கவும்
  3. இருபுறமும் சிறிது எண்ணெய் தடவி கோதுமை மாவு தூவி தடவவும்
  4. இப்பொழுது முன்னும் பின்னுமாக மடிக்கவும்
  5. ஆணும் பெண்ணுமாக படித்ததை கயிறு போல் திரித்து சுருட்டி வைக்கவும்
  6. உலகளவில் திருப்புவனம் தொட்டு திரட்டவும்
  7. தவாவில் இருபுறமும் வேகும் வரை சுட்டு எடுக்கவும்
  8. தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் விட்டுக் கொள்ளலாம்
  9. சுட்டு எடுத்த பரோட்டாக்களை ஒன்றின் மீது ஒன்று வைத்து நான்கு புறமும் கையால் தட்டவும்
  10. இப்பொழுது மிருதுவான பரோட்டா ரெடி
  11. குருமா செய்ய
  12. இஞ்சி பூண்டு 2 பச்சை மிளகாய் சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்
  13. தேங்காய் மற்றும் முந்திரி சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  14. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் கிராம்பு பிரிஞ்சி இலை தாளிக்கவும்
  15. இப்பொழுது வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  16. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  17. இப்பொழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  18. இஞ்சி பூண்டு விழுது வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை மல்லி புதினா சேர்த்து வதக்கவும்
  19. தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்
  20. காய்கறிகள் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  21. குருமா வெள்ளையாக வேண்டுமென்றால் தக்காளிக்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்
  22. எலுமிச்சை சாறை அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவி வரும்போது சேர்த்துக் கொள்ளலாம்
  23. இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்