வீடு / சமையல் குறிப்பு / டிபன் சாம்பார்

Photo of Tiffen Sambar by Vaishnavi Prakash at BetterButter
617
0
0.0(0)
0

டிபன் சாம்பார்

Sep-20-2018
Vaishnavi Prakash
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

டிபன் சாம்பார் செய்முறை பற்றி

இட்லி தோசை வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுலபமாக செய்யக்கூடிய சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது 2
  2. தக்காளி நறுக்கியது 2
  3. பச்சை மிளகாய் 4
  4. பூண்டு ஆறு பற்கள்
  5. மஞ்சள் பூசணி வில்லைகளாக நறுக்கியது ஒரு கப்
  6. புளி எலுமிச்சை பழ அளவு
  7. வறுத்து அரைக்க
  8. துவரம் பருப்பு ஒரு மேசை கரண்டி
  9. தேங்காய் துருவியது ஒரு மேசைக்கரண்டி
  10. காய்ந்த மிளகாய் 10
  11. தனியா அரை மேஜைக்கரண்டி
  12. மிளகு ஒரு தேக்கரண்டி
  13. சீரகம் ஒரு தேக்கரண்டி
  14. தாளிக்க சிறிது கடுகு சீரகம் வெந்தயம் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள்
  15. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  16. தனி மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  17. உப்பு தேவையான அளவு
  18. வெல்லம் சிறிதளவு
  19. கொத்தமல்லி பொடியாக நறுக்கியது சிறிதளவு
  20. என்னை அரை மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு துவரம்பருப்பு காய்ந்த மிளகாய் தனியா மிளகு சீரகம் சேர்த்து வருகிறோம்
  2. இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்
  3. ஆறியவுடன் விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  5. வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. தக்காளி மற்றும் பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்
  7. மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. என்னை பிரியும் பொழுது தேவையான தண்ணீர் ஊற்றி காய் வேகும் வரை மூடி வைக்கவும்
  9. இடையிடையே கிளறி விடவும்
  10. இப்பொழுது கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
  11. புலி கொதித்தவுடன் வெல்லம் தேவையான உப்பு சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்