வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் பருப்பு வடை | ஓட்ஸ் மசாலா வடை

Photo of Oats Paruppu Vadi |Oats Masala Vadai by Manjula Bharath at BetterButter
1997
67
4.0(0)
0

ஓட்ஸ் பருப்பு வடை | ஓட்ஸ் மசாலா வடை

Jun-26-2016
Manjula Bharath
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தெலுங்கானா
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை பருப்பு - 1கப்
  2. உடனடி ஓட்ஸ் - 1/4 கப்
  3. வெங்காயம் - 3தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
  4. பச்சை மிளகாய் - 3-4 எண்ணிக்கை (நறுக்கியது)
  5. கறிவேப்பிலை - 1-2 கொத்து (நறுக்கியது)
  6. கொத்துமல்லி இலைகள் - 1/4 கப் (நறுக்கியது)
  7. பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
  8. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பைக் கழுவி 2-3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. தண்ணீரை முழுமையாக வடிக்கட்டி ஒரு பிளண்டரில் போடவும்.
  3. பொறபொறப்பான மாவாகத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
  4. தேவைப்படுமானால் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்துக்கொள்ளவும் ஆனால் மாவைத் தண்ணீராக்கிக்கொள்ளவேண்டாம்.
  5. மாவை பொறபொறப்பான பதத்தில் 2-3 முறை அரைத்துக்கொள்ளவும்.
  6. இந்த மாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, அனைத்துப் பொருள்களையும் சேர்த்து அவற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  7. மாவை சமப்பாகங்களாகப் பிரித்து வடை வடிவத்தில் உங்கள் உள்ளங்கைகளில் தட்டி அழுத்தவும்.
  8. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி வடையை எண்ணெயில் போட்டு அதன் இரு பக்கங்களும் பொன்னிறமாகும்வரை சிம்மில் வறுக்கவும். அப்போதுதான் வடையின் உள்பகுதி நன்றாக வேகும்.
  9. சல்லிக்கரண்டியால் பொரித்த வடையை எடுத்து சமையல் துண்டில் எடுத்து அதிகப்படியானத் தண்ணீரை வடிக்கட்டவும்.
  10. பச்சை அல்லது தேங்காய் சட்னியோடுச் சூடாகப் பரிமாறவும்!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்