சாம்பார் வடை | Sambar Vada in Tamil

எழுதியவர் Menaga Sathia  |  26th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Sambar Vada by Menaga Sathia at BetterButter
சாம்பார் வடைMenaga Sathia
 • ஆயத்த நேரம்

  3

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

78

0

Video for key ingredients

  சாம்பார் வடை recipe

  சாம்பார் வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Sambar Vada in Tamil )

  • நெய் - 3 தேக்கரண்டி
  • துருவப்பட்டக் கேரட் - 2 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
  • கொத்துமல்லி - கொஞ்சம் (விருப்பம் சார்ந்தது)
  • பொடியாக நறுக்கப்பட்ட சின்ன வெங்காயம் - 1/4 கப்
  • அலங்கரிப்பதற்கு:
  • புளி விழுது - 2 தேக்கரண்டி
  • வெல்லம் - 1 தேக்கரண்டி
  • நெய் - 2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  • கொத்துமல்லி - 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கப்பட்டது
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • சுவைக்கேற்ற உப்பு
  • சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2 பிளக்கப்பட்டது
  • தக்காளி - 1 பெரியது நறுக்கப்பட்டது
  • சின்ன வெங்காயம் - 15
  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • சாம்பாருக்கு:
  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • சுவைக்கேற்ற உப்பு
  • பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  • இஞ்சி - 1/2 இன்ச் துண்டு
  • பச்சை மிளகாய் - 3
  • முழு வெள்ளை உளுந்து - 1/2 கப்
  • வடைக்கு:

  சாம்பார் வடை செய்வது எப்படி | How to make Sambar Vada in Tamil

  1. குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது உளுந்தை ஊறவைக்கவும். தண்ணீரை முற்றிலுமாக வடிகட்டிக்கொள்ளவும். ஒரு கிரைண்டரில் இஞ்சியையும் பச்சை மிளகாயையும் அரைத்துக்கொள்ளவும். அதன்பின் உளுந்தை சேர்க்கவும். தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பஞ்சுபொல் அரைத்துக்கொள்ளவும்.
  2. மாவு பஞ்சுபோலவும் அட்ர்தியாகவும் செய்துகொள்ளவும். உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி எண்ணெய் தடவிய தாளை எடுத்து மாவில் சிறுசிறு உருண்டைகள் பிடித்து தாளில் தட்டிக்கொள்ளவும்.
  3. மையத்தில் சிறிய ஓட்டை போட்டு மெதுவாக சூடான எண்ணெயில் விடவும் வடையின் இரண்டு பக்கத்தையும் மிதமானச் சூட்டில் பொரிக்கவும். ஒரு டிஷ்யூ பேப்பரில் வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பிரஷர் குக்கரில் பருப்பை மஞ்சள் தூளோடு 4 விசில்களுக்கு வேகவைக்கவும். பருப்பு வெந்ததும் மசித்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பிறந்த மிளகாய், தக்காளி, சிவப்பு மிளகாய்த் தூள், புளிக் கரைசல், தேவையானத் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  5. மீண்டும் 1 அல்லது 2 விசில்களுக்கு வேகவைக்கவும். ஒரு கடாயில் நெய்+ எண்ணெய் சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும். வெடிக்க ஆரம்பித்ததும், சாம்பார் பொடியைப் போட்டு உடனே கலக்கவும்.
  6. உடனே பருப்புக் கலவையை உப்பு சேர்த்து தண்ணீர் பதத்தை சரிசெய்துகொள்ளவும். நன்றாகக் கொதிக்கவிடவும். பெருங்காயம், வெல்லம், கொத்துமல்லி சேர்க்கவும். அடுப்பை நிறுத்தவும்.
  7. ஒரு பாத்திரத்தில் 1 கப் சூடான சாம்பார் 1/2 கப் சூடான தண்ணீர் சேர்த்து வடைகளை 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  8. பரிமாறும் பாத்திரம் ஒன்றில் ஊறவைத்த வடையை வைத்து சூடான சாம்பாரை ஊற்றவும். பச்சை வெங்காயம், கேரட் துருவல், கொத்துமல்லி ஆகியவற்றை தூவவும். வடையின் மீது நெய் ஊற்றி சூடாகப் பரிமாறவும்.

  Reviews for Sambar Vada in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.